தலைமுடி சிகிச்சை

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பெரும்பாலானோர் தங்கள் பெற்றோரிடம் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால் பல திட்டுகளை வாங்கியிருப்போம். இது பல தலைமுறைகளாக நடக்கும் ஒன்றே. தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால், பெற்றோர்கள் திட்டுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு பின் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அது அவர்களுக்கு அல்ல, நமக்கு தான்.

ஆம், தலைக்கு தினமும் சிறிது எண்ணெய் தடவுவதால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அக்காலத்தில் எல்லாம் தினமும் தலைக்கு எண்ணெயை வழிய தேய்த்து வந்ததால் தான், ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருந்தது. ஆகவே ஃபேஷன், ஸ்டைல் என்று சொல்லி தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருந்தால், பின் உங்கள் முடியை மறக்க வேண்டியது தான்.

அதிலும் கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த எண்ணெய்களை வாங்கி தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் தேய்த்து வந்தாலே போதும். மேலும் வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரி, இப்போது தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

நரை முடி தடுக்கப்படும்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு இளமையிலேயே நரை முடி வருவதற்கு ஒரு காரணமாக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதையும் கூறலாம். ஆம், இதனால் முடிக்கு வேண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் கிடைக்காமல், நிறத்தை வழங்கும் நிறமியான மெலனின் குறைந்து நரைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் தினமும் எண்ணெய் தடவி வருவதன் மூலம், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, நிறமியும் ஊட்டம் பெற்று, முடிக்கு நிறத்தை வழங்கும்.

பொடுகு நீங்கும்

சிலருக்கு தலையில் பொடுகு அதிகம் இருக்கும். அப்படி இருப்பதற்கு ஒன்று ஸ்கால்ப் வறட்சி தான். அதிலும் வறட்சி அதிகமான நிலையில் தான் பொடுகு உருவாகி, பேன் வரத் தொடங்கும். எனவே தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, பொடுகு உருவாவது குறையும்.

பொலிவான முடி யாருக்கு

தான் பொலிவான முடியின் மீது ஆசை இருக்காது. ஆனால் அப்படி முடி பொலிவோடு இருக்க வேண்டுமெனில், முடி ஆரோக்கியமாகவும், எண்ணெய் பசையுடனும் இருக்க வேண்டும். அதற்கு தினமும் முடிக்கு எண்ணெய் தடவி வர வேண்டும்.

முடி உடைவது குறையும்

புரோட்டீனால் உருவாவது தான் முடி. எனவே நல்ல புரோட்டீன் நிறைந்த உணவை அன்றாடம் உட்கொள்வதோடு, தினமும் மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலை சீவும் போது முடி எளிதில் உடையக்கூடும். அதிலும் தலைக்கு பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றை தடவி வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து குளித்து வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, இடையிடையே முடி உடைவது தடுக்கப்படும்.

மனதை ரிலாக்ஸ் செய்யும்

வாரம் 1-2 முறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், அதிலும் நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால், மூளையில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மூளையின் இயக்கம் அதிகரித்து, ரிலாக்ஸாக இருப்பதை நன்கு உணரலாம்.

முடி வளரும்

தற்போது பலரும் முடி கொட்டுகிறது என்று பலரும் சொல்வதற்கு காரணம் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது தான். தலைக்கு தினமும் எண்ணெய் வைத்து வந்தால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, தலைக்கு மசாஜ் செய்வது போன்றது. இதன் மூலம் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

19 1434703625 6 healthyhair

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button