ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க துணையை அணைத்தபடி தூங்கினா இவ்ளோ லாபம் இருக்குதாம்…! தெரிஞ்சிக்கங்க…

நன்றாகத் தூங்குவதன் நன்மைகள் நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், இந்த நவீன யுகத்தில், அமைதியான உறக்கம் மிகவும் அபூர்வமாகிவிட்டது. மக்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மிகவும் களைப்பாக இருந்தாலும், தூங்கும் போது தூக்கமானது மன அழுத்தம் மற்றும் படபடப்பு உள்ளிட்ட சில சிக்கல்களால் தடைபடுகின்றது. இந்த சூழ்நிலையில் துணையுடன் குறிப்பாக ஜோடியாகத் தூங்குவது அவசியமான ஒன்றாக இருக்கும்.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக உறங்குவது பல நன்மைகளைத் தரும் என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்மையில், அவர்கள் இருவரும் தங்கள் படுக்கையை உடல்நல மற்றும் மனநலக் காரணங்களுக்காக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், உங்கள் துணையுடன் படுத்து உறங்கும் போது, பல ஆரோக்கியம் தொடர்பான நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். இதில் பல நன்மைகள் உண்டு.

துணையுடன் உறங்கும் போது மிக சீக்கிரமாகவும், மிக ஆழமாகவும் உறங்கிவிடுவீர்கள். அழுத்தத்தைக் குறைப்பது உங்கள் இதயத்தைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல சவுகரியங்கள் இதில் உண்டு. ஏன் மற்றும் எவ்வாறு இது நல்லது என்பதை அறிந்து கொள்ள மேலெ படியுங்கள்.

சீக்கிரம் உறங்க முடியும்

தனியாக நீங்கள் உறங்க முற்படுகையில், நீங்கள் நிறைய யோசனைகளையும், சிந்தனையும் செய்து மூளைக்கு வேலை கொடுப்பதால் தூக்கம் கொஞ்சத்தில் வசப்படாது. இதுவே நீங்கள் துணையுடன் உறங்கினால், உங்கள் மூளை தூக்கத்திற்கு உடனே செல்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

நீங்கள் ஒரு துணையுடன் உறங்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்வீர்கள். இது உங்கள் நல்ல தூக்கத்தினை உறுதி செய்கிறது. ஒன்றாக உறங்கும் இருவர் வெகுநேரம் உறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மென்மையான கதகதப்பு

ஒன்றாக உறங்குவது உங்களுக்கு கதகதப்பைத் தரும். இது உங்களை ஆழ்ந்து உறங்கச் செய்யும்.

ஆக்ஸிடோசின் – மகிழ்ச்சியின் மந்திரம்

துணையுடன் உறவில் ஈடுபட்டால் தான் ஆக்ஸிடோசின் என்ற மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன் சுரக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடல் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டால் கூட, இந்த ஹார்மோன் சுரந்து உங்களின் துணையை மகிழ்விக்கும். ஏனெனில் நீங்கள் இந்த ஹார்மோனை அதிக அளவு கொண்டுள்ளீர்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

நீங்கள் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக உணரும் போது, நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள்? நீங்கள் அன்பை வெளிக்காட்டத் தொடங்குவீர்கள். அன்பில் அல்லது காதலில் மூழ்குவது நமக்கு இயற்கையாகக் கிடைத்த மன அழுத்தத்திற்கான மருந்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான இதயம்

போதுமான மற்றும் நிம்மதியான உறக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் உறுதி செய்யப்படுகிறது.

அதிக சுறுசுறுப்பு

நீங்கள் நன்றாக வசதியாக உறங்கினால், உங்கள் உடல் புத்துணர்வு பெறும். துணையுடன் சேர்ந்து உறங்குவது நீங்கள் விழித்தெழும் போது நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதை உறுதி செய்யும்.

உறவுகளின் அழுத்தங்களைக் குறைக்கும்

நல்ல கணவன் மனைவி ஜோடிகளே நல்ல அமைதியான உறக்கத்தைப் பெற முடியும். அதே நேரம் ஒன்றாக உறங்குவதும் நல்ல உறக்கத்தை உறுதி செய்யும் என்பது உண்மையே. அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் போது உணர்வுபூர்வமாக நெருங்கி இருப்பார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button