மருத்துவ குறிப்பு

பற்களை சேதப்படுத்தும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது பழமொழி. அவ்வாறு நோய் நம்மளை விட்டு போக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால் நம்மிடம் இரண்டு விஷயங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஒன்று வாய் துர்நாற்றம் இல்லாமல் இருப்பது, மற்றொன்று நல்ல பற்கள். நல்ல என்பது சொத்தை, மஞ்சள் போன்று இல்லாது வெண்மையான பற்களை குறிப்பது ஆகும்.

பெரும்பாலும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரணமாக இருப்பதே, பல் சொத்தையும், பற்களில் தங்கியிருக்கும் நச்சு கிருமிகளும் தான் என்பது அடியேன் எனது கருத்து அல்ல பல் மருத்துவர்களின் கருத்து. எனவே, பற்களை வலுவாக மட்டும் அல்லாது வெண்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

"அட.. நான் எல்லா தினமும் காலையில எழுந்ததும் பல்லு வெளக்கிட்டு தான் மறுவேலையே ஆஅ….." அப்படி என்று பெருமிதம் கொள்ள வேண்டாம். அதற்கு பின் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் பல வேலைகள் உங்கள் பற்களுக்கு கேடு விளைவிக்கிறது, அதைப்பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்….

உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் கழிவறையை ஃப்லஷ் (Flush) செய்யும் போதும் அதில் இருந்து வெளிவரும் கிருமிகள் 10 மீட்டர் தொலைவில் உள்ள பொருள்கள் வரை பரவுமாம். எனவே, உங்கள் கழிவறையில் டூத் பிரஷ், டூத் பேஸ்ட் போன்ற பொருட்களை வைப்பதை தவிருங்கள்.

டூத் பிக்ஸ் (ToothPicks)

உணவு சாப்பிட்ட பிறகு உணவு துகள்கள் சிக்கி இருந்தாலும், இல்லாவிட்டாலும் டூத்பிக்ஸ் பயன்படுத்துவது தற்போது மாடர்ன் பழக்கம் ஆகிவிட்டது. டூத் பிக்கில் பல ஃப்ளேவர்கள் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்துவதால் பற்கள் மற்றும் ஈறு சார்ந்த பிரச்சனைகள் வருவதாக கூறப்படுகிறது. நாம் தினந்தோறும் இந்த தவறை செய்து வருகிறோம்

பற்களுக்கு மத்தியில் சுத்தம் செய்வது.

இதை ஃப்லோசிங் (Flossing) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். பிரஷ் போக முடியாத இடங்களிலும் கூட உணவு துகள்கள் ஒட்டியிருக்கும். எனவே, படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள படி பற்களை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்

தினமும் பல் துலக்குவது மட்டுமின்றி, நாவினை சுத்தம் செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும். தினமும் நாக்கினை சுத்தம் செய்யாமல் இருப்பதால் தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

வாய் கொப்பளிக்கும் பழக்கம்

ஒவ்வொரு வேளையும் உணவருந்திய பிறகு வாய் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இது, உடனே வாயில் சிக்கியிருக்கும் உணவுகளை அகற்றவும், கிருமிகள் அண்டாமல் இருக்கவும் உதவும்.

பல் சொத்தை

நிறைய பேர் தங்கள் பற்களில் பல் சொத்தை இருந்தாலும் அதை கவனிப்பதை இல்லை. உங்கள் பற்களில் சிறு துவாரங்களோ அல்லது சிறிய சொத்தையாக இருந்தால் கூட அதை பல் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டியது அவசியம். இது பெரிதானால் பல்லையே பிடுங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

டூத் பேஸ்ட்

உப்பு, எலுமிச்சை, ஏலக்காய் என்ன அனைத்தும் இருப்பதாய் கூறும் டூத் பேஸ்ட்டுகளில் நிறைய இரசாயனங்களும் இருக்கின்றன. எனவே, இயற்கையான பொருள்களை பயன்படுத்தினால் உங்கள் பல் மிக வலுவாக இருக்கும்.

சரியான டூத் பிரஷ்

மலிவாக கிடைக்கிறது என தரமற்ற டூத் பிரஷ்ஷினை பயன்படுத்த வேண்டாம். இது, ஈறு பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிவிடும்.

இரவும் பல் துலக்க வேண்டும்

காலை மட்டுமின்றி இரவு தூங்குவதற்கு முன்பும் ஒருமுறை பல் துலக்க வேண்டியது அவசியம். இல்லையேல் நீங்கள் இரவு சாப்பிட்ட உணவின் மூலம் உருவாகும் பாக்டீரியாகள் இரவு முழுக்க உங்கள் வாயிலேயே தங்கிவிடும்.
25 1435230877 8tensurprisingthingsthatruinteeth

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button