மருத்துவ குறிப்பு

திங்கட்கிழமை டென்ஷனை குறைக்க 5 வழிகள்!

எல்லாருக்குமே திங்கட்கிழமை என்பது டென்ஷனான நாளாகவே தெரியும். காலை வேலைக்கு செல்பவர்கள் துவங்கி, கல்லூரிக்கு செல்பவர்கள் வரை அனைவருமே அந்த நாளை டென்ஷனான நாளாக தான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதலே மன்டே ஸ்டேட்டஸ்கள் தெறி ஹிட் அடிக்கும். இப்படி அனைவரும் சளித்துக்கொள்ளும் திங்கள் கிழமையை செம ஃபிரெஷ்ஷாக துவங்க 5 வழிகள் இதோ…
image01
1. ஃப்ரெஷ்ஷாக துவங்குங்கள்!

காலை எழுந்து உங்களது வழக்கமான உடற்பயிற்சி அல்லது 2 கி.மீ நடைபயிற்சி, 5 கி.மீ சைக்கிளிங் இதில் எதாவது ஒன்றோடு அன்றைய நாளை துவங்குங்கள். இவையெல்லாம் அதிகாலை 6-6:30 மணிக்குள் முடித்து அலுவலகம் அல்லது கல்லூரிக்கு செல்ல தயாராகுங்கள் அன்றைய நாள் ஃப்ரெஷ்ஷாக துவங்கும். இந்த உத்வேகம் நாள் முழுக்க உங்களோடு இருக்கும்.

2. மனதை ரிலாக்ஸ் ஆக்குங்கள்!

காலை எழுந்து செல்போனில் ஃபேஸ்புக் டிபிக்கு எத்தனை லைக் வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் யார் மெஸேஜ் செய்திருக்கிறார்கள் என துவங்காமல் பிடித்தமான பாடல் ஒன்றை கேளுங்கள். இசை மென்மையாக உள்ளது போன்ற பாடலாக இருந்தால் அன்றைய நாள் அமைதியான முறையில் துவங்கும். இந்த அமைதி அலுவலக டென்ஷனை குறைக்கும்.

6 Benefits of Hearing The Song for Health

3. யாரோடு சாப்பிடப்போகிறீர்கள்!

அன்றைய நாளில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்களுக்கு பிடித்தமான நபருடன் காலை உணவை சாப்பிடத் துவங்குங்கள். உங்கள் வார இறுதியை பற்றிய கலந்துரையாடலுடன் துவங்கும் அந்த நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கும். மனதுக்கு பிடித்த விஷயங்களோடு துவங்கும்போது உங்கள் விருப்பம் அதிகமாக இருக்கும். அதனால் டென்ஷன் உங்களை நெருங்காது.

kosilo heartlandchurch

4. வேகமாக இருங்கள்!

திங்கட்கிழமைகளை பெரும்பாலும் நாம் மெதுவாக ஆரம்பிப்பது தான் நமது டென்ஷனுக்கு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. திங்கள் கிழமைகளை வேகமாக துவங்குங்கள். நீங்கள் எழுந்திருப்பது துவங்கி பஸ் பிடிப்பது வரை அனைத்தையுமே 10 நிமிடம் முன்பாகவே செய்ய ஆரம்பியுங்கள். தானாகவே உங்கள் நாள் வேகமாக துவங்கி விடும்.

shutterstock130097864

5. அப்டேட் செய்யுங்கள்:

வார இறுதி நாட்களில் கல்லூரி அல்லது அலுவலக வேலைகளில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். உங்கள் வேலை அல்லது படிப்பில் நடந்துள்ள அப்டேட்டுகளை காலை அலுவலகம்/ கல்லூரி வந்தவுடன் அப்டேட் செய்யுங்கள். இதனை முழு கவனத்துடன் செய்யும் போது உங்கள் திங்கள் கிழமை போரடிக்காமல் இருக்கும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து செய்ய துவங்கிவிட்டால் இனி ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் மன்டே ஸ்டேட்டஸ்களில் ”நாளை மன்டே, ஜாலியான நாள்” என்று சந்தோஷமாக உங்கள் ஸ்டேட்டஸ் இருக்கும். இது தான் பல வெற்றியாளர்களின் ஃபார்முலாவும் கூட. நீங்களும் வெற்றியாளர் தானே பாஸ்! இனி உங்கள் திங்கட்கிழமைகளை தெறிக்க விடுங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button