பிற செய்திகள்

நான் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன்… நடிகை ரேகா புதிய ரேகாஸ் டைரி

நடிகை ரேகா புதிய ரேகாஸ் டைரி என்ற பெயரில் புதிய யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் தொடக்கவிழாவில், பிக் பாஸ்4 போட்டியாளர்கள் மற்றும் குக்வித் கோமாளி பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்த யூடியூப் சேனல் தொடங்கி ரேகாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை கூறினர்.

முதல் படம் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 80-களின் இறுதியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேகா. கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
yrstdr
ஹிட் படங்கள் ரேகாவின் புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, எங்க ஊரு பாட்டுக்காரன், பாட்டுக்கு நான் அடிமை ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் பசுமையாக நிலைத்து நிற்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்த இவர் 2002ம் ஆண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

குக்வித் கோமாளி சன் டிவி, விஜய் டிவி, மலையாளம் மற்றும் தெலுங்கு சேனல்களில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து உடன் இருந்த கோமாளிகளை பாடாய் படுத்தினார். இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கு பெற்றார்.
rgder
யூ ட்டியூப் சேனல் இந்நிலையில் ரேகா தற்போது ரேகாஸ் டைரி என்ற யூ ட்டியூப் சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்களான வனிதா விஜய குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, ரியோ, அர்ச்சனா, அனிதா சம்பத், கேப்ரில்லா என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே போல குக்வித் கோமாளி பிரபலங்கள் புகழ், பவித்ரா லட்சுமி, அஸ்வின், கனி, ஷாகிலா, ரட்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

உங்களோடு என் பயணம் அப்போது பேசிய ரேகா , நான் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன் அதற்கு, ரேகாஸ் டைரி என பெயர் வைச்சிக்கேன். இதுலே நான் உங்களோடு என பயணத்தை தொடங்க இருக்கிறேன் . இந்த உலகத்துல நான் பார்த்த காட்சிகள், பார்த்துட்டு இருக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் உங்ககிட்ட ஷேர் பண்ண வந்து இருக்கேன். இதுல நான் சொல்றது தப்பா இருந்தாலும் அதையும் என்கிட்ட சொல்லுங்க என்றார்.
regt

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button