அசைவ வகைகள்

சூப்பரான காரமான பெங்காலி மீன் குழம்பு

பெங்காலியில் செய்யப்படும் மீன் குழம்பை ‘மச்சல் ஜால்’ என்று சொல்வார்கள். இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான்.

இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பான மச்சல் ஜால் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:

மீன் – 4 துண்டுகள்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எணணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பிரியாணி இலை, ஓமம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அத்துடன் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் பொரித்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button