மருத்துவ குறிப்பு

பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி

பெண்களை அதிகளவில் தாக்கும் மூட்டுவலி
எனப்படும் உடல், மூட்டுகளின் வலி பொதுவில் பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படும். இந்தப் பாதிப்பில் உடல் முழுக்க தசைகளில் வலி, மூட்டுக்களில் வலி, சோர்வு என பாதிக்கப்பட்டோர் கூறுவர். இதனால், இவர்கள் அதிக மனச்சோர்வுடனும், உடல் இயலாமையின் காரணமாகவும் சமுதாயத்திலிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள். பைப்ரோமயால்ஜியா அறிகுறிகள்:-* நீண்ட நாள் தசை வலி, தசை பிடிப்பு, தசை இறுக்கம் இருக்கும்.* சோர்வு, மிக அதிக சோர்வு, குறைந்த சக்தி இருக்கும்.* தூக்கமின்மை இருக்கும். தூங்கி எழுந்த பிறகும் தூக்கமில்லாதது போன்ற சோர்வு இருக்கும்.

* சற்று நேரம் தொடர்ந்து உட்கார்ந்தாலோ, தூங்கி எழும்பொழுதோ உடல் இறுக்கமாக இருக்கும்.

* ஞாபகம் வைக்க, கவனம் வைக்க, சிறு சிறு வேலைகள் கூட கடினமாக இருக்கும்.

* டென்ஷன், தலைவலி, மைக்ரேன்தலைவலி இருக்கும்.

* முகம், தாடை வலி இருக்கும்.

* சிறுநீர் வெளிப்போக்கில் அவசரம்.

* கை, கால், முகம், பாதம் அடிக்கடி மரத்துப் போதல்.

* சத்தம், பளீர் வெளிச்சம், மருந்து வாசனை, சில உணவுகள், குளிர் தாங்காது இருக்கும்.

* உடற்பயிற்சி செய்ய இயலாமை இருக்கும்.

* டென்ஷன், மனச்சோர்வு இருக்கும். பைப்ரோமயால்ஜியாவின் வலி காலை, மாலை அதிகம் இருக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், ஹார்மோன் மாறுபாடுகள், மனக்கவலைஇவற்றினாலும் வலி அதிகம் இருக்கும். இந்த உடல் வலி 80 சதவீதம் பெண்களையே தாக்குகின்றது. ஆண், பெண் இவருக்குமே சில குறிப்பிட்ட இடங்களில் வலி இருக்கும்.

அவை…

* தலை பின்புறம்

* இரு தோள்களுக்கும் நடுவே

* கழுத்தின் முன்னால்

* மேல் நெஞ்சு

* கை முட்டியின் வெளிபுறம்

* இடுப்பின் இருபுறம்

* கால் முட்டியின் உள்புறம் இந்த பாதிப்பு உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக வலியினை உணர்வார்கள்.

இதற்கு நிவாரணம் பெற….

* அடிக்கடி டென்ஷன் ஆவதை அடியோடு விடுங்கள். இது கண்டிப்பாய் முன்னேற்றத்தினைத் தரும். யோகா, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம்.

* மறதி அதிகமாவதால் எதனையும் எழுதி வையுங்கள்.

* அதிக கடுமை இல்லாத உடற்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.

* வெது வெதுப்பான நீரில் குளியுங்கள்.

* காபியை தவிருங்கள். குறிப்பாக, மதியத்திற்கு மேல் காபியை தவிருங்கள். டீ, சாக்லேட் இவற்றினையும் தவிருங்கள்.

* காரம், மசாலா உணவுகளைத் தவிருங்கள்.

* மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள். பைப்ரோமயால்ஜியா 18 வயதிற்கு மேற்பட்ட யாருக்கும் வரலாம். குறிப்பாக, பரம்பரை காரணம் ஆகலாம். உடலில் காயம் ஏற்படுதல், விபத்து, கிருமிகளின் தாக்குதல் இவற்றினாலும் ஏற்படும். வலி 3 மாதங்களுக்கு மேல் இருந்தாலோ, வலது, இடது இரு பக்கங்களிலும், இடுப்புக்கு மேல், கீழ் என இரு பிரிவுகளில் இருந்தாலோ பைப்ரோமயால்ஜியா பாதிப்பின் வாய்ப்பே அதிகம்.

உடலின் வலி ஏற்படும் குறிப்பிட்ட 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருந்தாலே இந்நோயைப் பற்றிய சோதனைகள் தேவை. இதனை குணப்படுத்துவதில் மூட்டு நிபுணர், பொது மருத்துவர், பயிற்சியாளர் என அனைவரின் ஈடுபாடும் தேவை.

* வலி நிவாரண சிகிச்சை

* முறையான தூக்கத்திற்கான சிகிச்சை

* உடற்பயிற்சி

* மன உளைச்சல் இன்மை

* மசாஜ்

* தண்ணீர் உடற்பயிற்சி சிகிச்சை

* யோகா அனைத்தும் ஒருசேர பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கவேண்டும். பைப்ரோமயால்ஜியா மிகவும் தொந்தரவான பாதிப்பே. ஆனால், எந்த மூட்டுக்களையும், உள் உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இந்நோய்க்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சியே உடல்நலத்திற்கு மிகப்பெரிய உதவி ஆகின்றது.

* தசைகள் வலுப்பெறுகின்றன.

* இருதயம் பலம் பெறுகின்றது.

* எடை சீராகின்றது.

* மனம் புத்துணர்ச்சி பெறுகின்றது.

* ரத்த ஓட்டம் சீராகின்றது.

* உடல் நல்ல அளவு ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றது.

* நடைப்பயிற்சி போன்றவை எளிய உடற்பயிற்சி

* சற்று மூச்சு வாங்க செய்வது (உ-ம்) சைக்கிள் ஓட்டுதல் மிதமான உடற்பயிற்சி.

* ஓடுவது, கடும் எடை தூக்குவது போன்றவை கடும் உடற்பயிற்சி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button