சமையல் குறிப்புகள்

ஆஹா பிரமாதம்! மொறு மொறு பிஷ் ஃபிங்கர்ஸ்…

தேவையான பொருட்கள்
வஞ்சரம் (அ) வவ்வால் மீன் – அரை கிலோ
எலுமிச்சை பழம் – இரண்டு (சாறு எடுக்கவும்)
ரொட்டித்தூள் – 100 கிராம் காஷ்மீரி
மிளகாய் தூள் – அரை தேக்கரணடி
முட்டை – மூன்று
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
மொறு மொறு பிஷ் ஃபிங்கர்ஸ்… ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி? | Fish Finger Recipe

செய்முறை
முட்டையை சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

மீனை சுத்தம் செய்து எலும்பு, தோல் நீக்கவும். பின்னர் மீனை விரல் நீள, அகலத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

Related Articles

மிளகு தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், எலுமிச்சைபழம் சாறு இவற்றைக் கலந்து மீனில் புரட்டி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மொறு மொறு பிஷ் ஃபிங்கர்ஸ்… ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி? | Fish Finger Recipe

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், அடித்த முட்டையில் மீனை முக்கி, ரொட்டித்தூளில் புரட்டி, எண்ணெயில் போடவும்.

மீன் வெந்ததும், திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சூப்பரான பிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button