மருத்துவ குறிப்பு

அய்யே, பொண்ணுங்க “பிரா”வ பத்து நாளுக்கு ஒரு தடவ தான் துவைக்கணுமா!?!?

ஒருவேளை நீங்கள் சுத்தபத்தமாக இருப்பவராக இருந்தால், ஒரு நாளுக்கு இரண்டு முறை குளிப்பவராக இருந்தால் தயவு செய்து மேற்கொண்டுப் படிக்க வேண்டாம்!! சமீபத்தில் காஸ்மோப்போளிடனை சார்ந்த துணி வல்லுனர்கள் பெண்களின் மார்புக்கச்சு என்று கூறப்படும் பிராவை எப்படி துவைக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

இதுல என்னப்பா உனக்கு பிரச்சனை, துவைக்க தான சொல்லிருக்காங்க…” என்று கருத வேண்டாம். அவர்கள், “பெண்களின் பிராக்களை பத்து நாளுக்கு ஒரு முறை துவைப்பது தான் சரியான முறை” என்று கூறியிருக்கின்றனர். ஐரோப்பிய நாட்டு பெண்களுக்கே இது தலைசுற்ற வைக்கிறது என்கையில். நம் நாட்டில் கூறவா வேண்டும்.

சரி, அப்படி பத்து நாட்களுக்கு ஒரு முறை துவைத்தால் போதும் என்று இவர்கள் கூற காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா…. தொடர்ந்து படியுங்கள்…

அணிபவருக்கு பாதிப்பு

இது குறித்து வல்லுனர்கள் முதலில் கூறியிருப்பது, தொடர்ந்து தினமும் துவைப்பதனால் பிராவின் எலாஸ்டிக் தன்மை போய்விடும், இதனால் அது மார்பகங்களை சரியாக உட்கார செய்யாது. இதனால் பெண்களுக்கு அசௌகரியம் மற்றும் மார்பக வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள் (ஓஹோ.. இப்படியொன்னு இருக்கோ….)

எத்தனை முறைக்கு ஒருமுறை துவைக்கலாம்…

குறைந்தது மூன்று அல்லது நான்கு முறை உபயோகப்படுத்திய பிறகு துவைத்தால் போதும். ஒருவேளை அதிக வியர்வை கசிந்திருந்தால் உடனே துவைக்கலாம். இது, அணிபவர் செய்யும் வேலை திறன்களை பொறுத்து. அதிகம் வியர்வை வெளிவாராத பட்சத்தில் பத்து நாட்களுக்கு ஒருமுறை துவைத்தால் போதும் என்று கூறுகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் பிரா

ஒருவேளை ஸ்போர்ட்ஸ் பிரா அணிபராக இருந்தால், அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம். ஏனெனில், விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக வியர்வை வெளிவரும் வாய்ப்பிருக்கிறது. அதனால், ஸ்போர்ட்ஸ் பிரா அணிபவர்கள் அந்தந்த நாட்களிலேயே துவைக்க வேண்டியது அவசியம்.

மிக முக்கியமானது

ஒரு சிலர், பிரா வாங்குவதில் கூட கஞ்சத்தனம் பார்த்துக் கொண்டு, ஓரிரு பிராக்களை மட்டுமே பயன்படுத்துவர். இது, மிகவும் தவாறான அணுகுமுறை. ஓரிரு பிராக்களை தொடர்ந்து பயன்படுத்துவதனால், துணி சேதமடைவது மட்டுமின்றி, அது பெண்களின் மார்பக சருமத்தையும் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

எலாஸ்டிக் தன்மை

பெரும்பாலும் இப்போது பெண்களின் பிராக்கள் எலாஸ்டிக் பொருள்களினால் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, அந்த எலாஸ்டிக் தன்மை திரும்ப இயல் நிலை பெற ஓர் நாளாவது ஆகும். இடைவிடாது மாற்றி மாற்றி அணியும் போது பிராவின் எலாஸ்டிக் தன்மை இழந்துவிடும். இதனால், இலகுவாக அல்லது இறுக்கமாக உணர நேரிடும். இது இரண்டுமே, பெண்களுக்கு மார்பகம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவது ஆகும்.

துவைக்கும் முறை

பிராக்களை துவைக்கும் போது பிழியக் கூடாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதே போல வாஷிங் மெஷீனில் துவைப்பவர்கள், ட்ரையர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் பரிந்துரைகின்றனர். ஏனெனில், ட்ரையர்களில் வெளிப்படும் அதிக சூடு, பிராக்களின் இயல்பு வடிவம் / உருவத்தை மாற்றிவிடும்.

காயவைக்கும் போத

ு அதே போல, கம்பிகளில் தொங்க விடாமல், சமநிலை பரப்பில் சாதரணமாக காயவைத்தாலே போதும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பிராக்களின் வடிவம் பொருந்தாத நிலைக்கு மாறும் போது (எலாஸ்டிக் தன்மை இழப்பதனால்) பெண்களுக்கு முதுகு வலி, மார்பக வலி, சுவாசப் பிரச்சனை, மார்பக கட்டிகள் போன்ற நிறையப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயங்கள் இருக்கின்றன. இதனால் தான் எலாஸ்டிக் தன்மை இழக்காமல் இருக்க, இவ்வாறு எல்லாம் செய்ய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.02 1483338964 refresh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button