ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்!

குழந்தைகள் என்றாலே அதிக கவனம் மற்றும் பராமரிப்பு அவசியம். அதிலும் பிறந்த குழந்தைகள் என்றால் கூடுதல் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு அவ்வப்போது போதுமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு முறையான உணவு கொடுக்கும் போதோ, அவர்கள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போதோ கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

முதல் வருடம் முழுவதும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாயின் பாலில் இருந்தே கிடைக்கப் பெறுகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமைகிறது. இதன் மூலம் குழந்தைகளின் உடல் எடையும் கணிசமாக உயர அல்லது குறையத் தொடங்கும். குழந்தைகளுக்கு போதுமான நீர்ச்சத்து தாயின் தாய்ப்பாலிருந்தே கிடைக்கப் பெறுகிறது.

 

ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு வயிற்று போக்கு மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டால் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை அவ்வளவு எளிதில் நீங்கள் கண்டறிய இயலாது. இப்படி பிறந்த குழந்தைக்கு ஏற்படும் நீரிழப்பை கீழ்க்கண்ட 5 அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் குழந்தையை நீரிழப்பு ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம்.

வாய் மற்றும் தோலின் வறட்சி

புதியதாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் புரிந்து கொள்வது என்பது கடினம். எனவே குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இருக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் உதடுகளை வைத்து கண்டறியலாம். உதடுகள் அடிக்கடி வறண்டு போகிறதா இல்லையா என்பது கவனியுங்கள். மேலும் குழந்தையின் தோல்களும் வறண்டு போகிறதா என்பதை கவனியுங்கள். நாக்கு மற்றும் உமிழ்நீரின் நிறத்தை பாருங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு தாகம் எடுக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். இதைத் தவிர வாயைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சருமத்தில் தோல்கள் உரிந்து காணப்படும். இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக விடாதீர்கள்.

கண்ணீர் வராமல் அழுதல்

குழந்தைகள் வளரும் போது எதுக்கெடுத்தாலும் அழுவது தொடர்கிறது. இப்படி அவர்கள் அழும் போது கண்ணீர் வரவில்லை என்றால் அவர்கள் உடம்பில் போதுமான நீர்ச்சத்தின்மையை அது காட்டுகிறது. இந்த மாதிரியான சமயங்களில் குழந்தைக்கு பால் மற்றும் தண்ணீர் பருகக் கொடுங்கள். அதே மாதிரி அவர்களின் ஊட்டச்சத்துகளிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

உலர்ந்த டயப்பர்கள்

பிறந்த குழந்தையின் டாய்லெட் போகும் பழக்கத்தை பற்றி பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது. முதல் ஆறு மாதங்களில், ஒரு நாளைக்கு 5-6 டயப்பர் வரை நீங்கள் மாற்றம் செய்தாக வேண்டும். சிறுநீர் கழிப்பது குறைந்தாலோ மலம் கழிப்பது குறைந்தாலோ அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். குழந்தையின் சிறுநீரின் நிறத்தைப் பாருங்கள், அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு இருக்கலாம். இது சாதாரணமானது அல்ல.

மந்தமான நிலை மற்றும் தூக்கம்

பெரியவர்களைப் போலவே, குழந்தைகளுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்காத போது, ​​அவர்கள் மிகவும் சோர்வடைந்து, இயல்பை விட சோம்பலாகத் தோன்றுவார்கள். உங்கள் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்டால் அவர்கள் அடிக்கடி தூங்கிக் கொண்டே இருப்பார்கள். எனவே உங்கள் குழந்தையின் தூக்க வழக்கத்தை அடிக்கடி நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம். இது குறித்து சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

எரிச்சலூட்டும் தன்மை

உங்கள் குழந்தைக்கு பசி ஏற்பட்டாலோ அல்லது தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலோ அதிக எரிச்சல் அடைய ஆரம்பிப்பார்கள். உங்களை தொந்தரவு கூட செய்வார்கள். எனவே அவர்களை அமைதிப்படுத்த நீங்கள் எதாவது விளையாட்டு காட்டலாம். குழந்தைகள் சில நேரங்களில் மற்ற காரணங்களுக்காகக் கூட எரிச்சல் அடையலாம். எனவே இந்த ஒரு அறிகுறியை வைத்துக் கொண்டு குழந்தைகளின் நீர்ச்சத்தை முடிவு செய்யாதீர்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் குழந்தைகள் நல மருத்துவரை உடனே ஆலோசித்து கொள்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button