பழரச வகைகள்

சருமப் பாதுகாப்புக்கு தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்!

தேவையானவை: தர்பூசணி – 300 கிராம், பன்னீர் திராட்சை – 50 கிராம், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்
திராட்சையில் ‘ரெஸ்வெரட்ரால்’ எனும் அரிய வகை ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது, மலக்குடல் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோய், கரோனரி இதய நோய்கள், அல்சைமர் போன்றவற்றைத் தடுக்கும்.
திராட்சை மற்றும் தர்பூசணி இரண்டுமே கலோரிகள் குறைந்தவை. எனவே, உடல் பருமனானவர்களும் தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தலாம்.

வைட்டமின் ஏ, சி, கே, பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், லைக்கோபீன் நிறைந்துள்ளன.
தர்பூசணி, திராட்சை போன்றவை அலர்ஜியாக இருந்தால், சிலருக்கு சளி பிடிக்கும். எனவே, அவர்கள் இந்த ஜூஸ் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். அலர்ஜியாக இல்லாதபட்சத்தில், சளி பிடிக்குமோ என்ற அச்சம் வேண்டாம். தாராளமாகப் பருகலாம்.

குழந்தைகள், முதியவர்களுக்கு ஏற்ற ஜூஸ். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. நீர் இழப்புப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் தரும். மலச்சிக்கல் நீங்கும்.
தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு நல்லன. எனவே, இந்த ஜூ்ஸைத் தொடர்ந்து, சீரான இடைவெளிகளில் குடித்துவந்தால், மெள்ள மெள்ள சருமம் பளபளப்பாகும்.
தாமிரம், துத்தநாகம், இரும்பு ஆகிய தாதுஉப்புகள் இந்த ஜூஸில் நிறைந்துள்ளன. உடனடி ஆற்றல் தேவைப்படும் காலங்களில் இந்த மிக்ஸ்டு ஜூஸை அருந்துவது நல்லது.
9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button