28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
c79018
Other News

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

இந்தியாவில் திருமணமான 13 நாளில் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் அவர் சடலம் எரிக்கப்பட்ட அதே இடத்துக்கு சென்று கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் கிராமத்தை சேர்ந்தவர் மனீஷ் நேதம். காவல்துறையில் பணிபுரிந்து வந்த மனீஷுக்கும் லதா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

புதுமணத்தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்வை தொடங்கிய நிலையில் திருமணமான 13 நாளில் லதா வீட்டில் உள்ள டைல்ஸ் தரையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து லதாவின் உடலுக்கு மனீஷ் இறுதிச்சடங்கு செய்த நிலையில் அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத மனீஷ் தினமும் அந்த சுடுகாட்டுக்கு சென்று மனைவியை நினைத்து அழுதபடி இருந்தார்.

இந்த நிலையில் மனைவி உயிரிழந்து 17 நாட்கள் ஆன நிலையில் வழக்கம் போல சுடுகாட்டுக்கு சென்று கதறி அழுதார். பின்னர் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மனீஷ், இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இறப்பதற்கு முன்னர் அவர் வாட்ஸ் அப்பில் ஒரு கடிதத்தை தனது சகோதரருக்கு அனுப்பினார். அதில், என்னால் லதாவை மறக்க முடியவில்லை, அவள் நினைவாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு கனவு வீட்டை கட்டி லதாவை மணந்தேன், இப்போது லதா இல்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் மனீஷுக்கு கண்ணீர் மல்க இறுதி ஊர்வலம் நடத்தி லதா தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவர் உடலையும் தகனம் செய்தனர்.

Related posts

சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்..

nathan

பருப்பு வகைகளை ஊறவைத்து தான் சமைக்க வேண்டும்!தெரிஞ்சிக்கங்க…

nathan

1000 கோடியை தொட்ட ஜவான்.. முதல் தமிழ் இயக்குனர் என பெருமை

nathan

வனிதா வீட்டு திருமணம்.. ஒன்றுகூடிய பிக் பாஸ் நட்சத்திரங்கள்

nathan

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்! மனைவி ஆயிஷா செய்த கொடுமை

nathan

ஜெயம் ரவி மனைவி இவ்வளவு மோசமானவரா? பதிவால் ஏற்பட்ட கோபம்

nathan

காதல் திருமணம் செய்து கொள்வேன்- விஜய்

nathan

கத்ரீனா கைப்பின் மார்பிங் படம் வைரல்!

nathan

மாநாட்டில் அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan