காய்கறி காளான் பீட்சா

என்னென்ன தேவை?

தோசை மாவு – 1 கப்,
குடை மிளகாய் அரிந்தது – 1/4 கப்,
வெங்காயம் – 2 (வட்டமாக நறுக்கவும்),
உப்பு – சிறிது,
எண்ணெய் – சிறிது,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
(காளான் – 1 கப், தக்காளி – 1, மல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்)
அனைத்தையும் பொடியாக அரியவும், ஓமம் – 1 டீஸ்பூன்,
(மிளகுத்தூள், பனீர் துருவல், சீஸ் துருவல்) – தலா 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய காலிஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய்/வெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, துருவிய காலிஃப்ளவர், குடைமிளகாய் இவை அனைத்தையும் வதக்கி, உப்பு போட்டு, மிளகுத்தூள், காளான், ஓமம் சேர்த்து மல்லித்தழை தூவி வதக்கவும். தோசைக்கல்லில் மொத்தமான தோசையாக ஊற்றி காளான் மசாலாவை வைத்து அதன் மீது பனீர் துருவல், சீஸ் துருவல் போட்டு மூடி வைத்து வேக வைக்கவும். திருப்பிப் போட வேண்டாம்.

Leave a Reply