மருத்துவ குறிப்பு

இன்னுமா உங்க குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது? அப்போ இதை செய்யுங்கோ..!!

குழந்தைகளுக்கு அதிகபட்சம் மூன்று வயது வரை இரவில் தூங்கும் டயப்பர் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதற்கு மேல் டயப்பர் பயன்படுத்தமாட்டார்கள். இருப்பினும் குழந்தைகள் சில வருடங்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

How to stop bet wetting
காலையில் எழுந்து வீட்டு வேலைகளையும் பார்த்து, படுக்கையையும் சுத்தம் செய்வது வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு சற்று பிரச்சனையாக தான் இருக்கும். அதையும் தாண்டி ஏன் இத்தனை வயதாகியும் எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வியும் பெற்றோர்களுக்கு இருக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல்

இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினையைச் சய்யா மூத்திரம் அல்லது பேட் வெட்டிங்(bed wetting) எண்பார்கள். இது வேண்டுமென்றே செய்யும் செயல் அல்ல. தன்னிச்சையாக நடக்கும் ஒன்று. 5 முதல் 8 வயதுவரை உள்ள குழந்தைகள் இது போன்று செய்வார்கள்.

சாதரணமானதா?

பகலிலும் இரவிலும் இது போன்று படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். பொதுவாக இரவில் தூங்கும்போது குழந்தைகள் அறியாமல் சிறுநீர் போவதைத்தான் பேட் வெட்டிங் என்று கூறுகிறார்கள். இது சாதாரணமான ஒன்று. இதற்காக கவலைப்பட தேவையில்லை.

எப்போது குறையும்?

7, 8 வயதுவரைகூடக் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் போவார்கள். 10 வயதுக்கு மேல் இது சிறிது சிறிதாகக் குறையும். சில குழந்தைகள் எப்பொழுதும் இரவில் படுக்கையிலேயே சிறுநீர் போவார்கள்.

உடல் அதிகச் சிறுநீரை உற்பத்தி செய்வதாலும், அதை தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலையிலும், குழந்தை ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருப்பதாலும் இது போன்று படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுகிறார்கள்.

ஆபத்து?

இதனால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இதனால் சில குழந்தைகளுக்குக் கூச்ச உணர்வு வரலாம். தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக பெற்றோர்கள் பேச வேண்டும்.

இது சாதாரண விஷயம்தான், சீக்கிரமாக மாறிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும். இரவு உறங்கும் முன் அவர்களை கட்டாயமாக சிறுநீர் கழிக்க சொல்ல வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உணவுகள்

இரவு நேரத்தில் குளிர்ந்த உணவு, திரவ உணவு கொடுப்பதை குறைக்க வேண்டும். சில நேரம் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பி, சிறுநீர் போகச் செய்ய வேண்டும்.

சிறிது சிறிதாகக் குழந்தை தானாக எழுந்து போய்ச் சிறுநீர் கழித்த பின் படுத்துக் கொள்ளும். இந்தச் செயல்முறை நடைமுறையில் பலனளிக்கச் சற்று நாளாகும்.

இதில் கவனம் தேவை!

குழந்தைக்கு மனஉளைச்சல் வராமல் பாதுகாக்க வேண்டும். சிறுநீர்ப்பையில் பழுப்பு, காய்ச்சல் போன்றவை இல்லையா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.சில நேரம் இதற்கென்று மருந்துகள் தேவைப்படுகின்றன.

வைத்தியம் 1

நல்லெண்ணெயைச் சூடாக்கி, தொப்புளுக்குக் கீழே தடவி வருவது பலன் கொடுக்கும். விளக்கெண்ணெயை ஆசன வாயில் தடவுவதும் நல்லது. வஸ்தி ஆமய அந்தக கிருதம் என்னும் நெய்யை இரவு உறங்கும் முன் 1 ஸ்பூன் கொடுக்கலாம்.

தர்ப்பைப்புல் கஷாயம் சிறந்த கைமருந்து. தாமரை சூர்ணம், அரசம்பட்டை சூர்ணம் இரண்டையும் 5 கிராம் தேனில் கலந்து கொடுக்கலாம்.

வைத்தியம் 2

இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். நரம்புகளை வலுவாக்க அஸ்வகந்தாதி சூர்ணம் 3 அல்லது 5 கிராம் பாலில் கலந்து கொடுக்கலாம். தலைக்கு லாக்ஷாதி தைலம் தேய்த்துக் குளிக்கச் சொல்லலாம். நாள்பட இது குணமாகி விடும்.

அதன் பிறகும் மனதில் கூச்ச உணர்வு அதிகமாக இருந்தால் வல்லாரை நெய் அல்லது கல்யாணகம் நெய் கொடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button