முகப்பரு

முகப்பருக்கள் வருவதை தடுக்கும் ஆயுர்வேத வழிகள்

இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன. பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம்.

ஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

• சந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

• தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். • மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.

• குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா? எனவே தினமும் 4 முதல் 5 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

f109da41 4d58 45ec b2c7 5162d12b82a3 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button