கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.

அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்பகாலத்தில் 7முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி. கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறை வாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் உடல்எடைகுறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்துக்கள் மிக அவசியம். கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் இருக்கவேண்டிய உடல் எடையைவிட அதிகஎடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்யக் கூடாது.

பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும்.

c3b96ee3 0774 47f1 b522 522f1d6c5ba4 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button