சமையல் குறிப்புகள்

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (கீறியது)

Related Articles

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)

* பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)

* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து, நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1 கப்

* கெட்டியான தேங்காய் பால் – 1 கப்

* நீர் போன்ற தேங்காய் பால் – 2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1 சிறிய துண்டு

* ஏலக்காய் – 22 veg sodhi 1672231665

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

Kerala Style Veg Stew Recipe In Tamil
* அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, பச்சை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, நீர் போன்ற தேங்காய் பாலை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

* காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button