இனிப்பு வகைகள்

மஸ்கெற் (கோதுமை அல்வா) – 50 துண்டுகள்

தேவையான பொருட்கள்
750 கிறாம் கோதுமை மா
1 கிலோ சீனி
1/6 லீற்றர் எண்ணை
75 கிராம் முந்திரிப்பருப்பு
40 கிராம் ஏலக்காய் (பொடி செய்து)

செய்முறை
கோதுமைமாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக குளைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வைத்து அதற்குள் நீர் ஊற்றி அதை முதல்நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் அம்மாக் கலவையை ஊறவைத்த தண்ணீருல் சிறிது சிறிதாக சேர்த்து கரைத்து துணியில் வடித்து பாலாக எடுக்கவும்.

பின்னர் அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதனுள் சீனியை போட்டு சீனியை உருக விடவும் . சீனி நன்றாக உருகியதும் அதனுள் அம்மாப் பாலை ஊற்றி கட்டி படாது தொடர்ந்து கிண்டவும்.

கலவை ஒட்டும் பதம் வரும் போது எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டவும் திரள தொடங்கும் போது அதனுள் முந்திரியை பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிண்டவும்.

கலவை ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி றேயினுள் கொட்டி பரவி ஆற விடவும். மறுநாள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்

குறிப்பு:

உங்களுக்குத் தேவையான துண்டுகளை மேலே குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவும்
1b8a2dd0 2d4d 495e 8119 c60ca1fd2b8d

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button