ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்வது எப்படி?

கர்ப்பம் என்பது ஒரு அற்புதமான அனுபவம். அதே நேரத்தில், தோல் அழற்சி, வறண்ட சருமம், எடை அதிகரிப்பு மற்றும் நிறமாற்றம் போன்ற தோல் பிரச்சனைகளும் கர்ப்ப காலத்தில் ஏற்படும்.மெலஸ்மா இந்த தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும். எனவே, உங்கள் தோலில் கருப்பு, பழுப்பு அல்லது செதில் திட்டுகள் இருந்தால், உங்களுக்கு மெலஸ்மா இருக்கலாம். இந்த மெலஸ்மா முக்கியமாக 50-75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுகிறது. இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

20 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கும் மெலஸ்மா ஏற்பட வாய்ப்பு உள்ளது. மெலஸ்மா முகத்தில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது முகம், கன்னத்து எலும்புகள் மற்றும் தாடையின் மையப்பகுதியைக் குறிக்கிறது. மெலஸ்மா பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.

காரணங்கள்
மெலஸ்மா அல்லது கர்ப்ப கால முகமூடி இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போதும் மெலனின் உற்பத்தியைத் தூண்டும்போது ஏற்படுகிறது. இந்த செயல்முறை ஹைபர்பிக்மென்டேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. மெலஸ்மா ஏற்படும் போது உங்கள் சருமம் சற்று நிறம் மாறி இருக்கும் மற்றும் அடிவயிற்றின் மையத்தில் ஒரு இருண்ட அல்லது கருமை நிற கோடு இருக்கும். மெலஸ்மா ஏற்படுவதற்கு சூரியஒளி மிக முக்கியமான காரணமாக உள்ளது. கோடைகாலங்களில் பொதுவாக மெலஸ்மாவால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் குளிர்காலங்களில் மெலஸ்மாவில் உள்ள நிறமி செயல்படுவதில்லை. இதற்காக நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு இவை தானாக மறைந்து விடும்.

 

 

ஏற்படும் இடங்கள்

மெலஸ்மா முன்னர் குறிப்பிட்டது போல முகத்தின் நடுப்பகுதியில் ஏற்படும். அதாவது நெற்றி, கன்னங்கள், மேல் உதடு, மூக்கு மற்றும் கன்னம் ஆகியவை இதில் அடங்கும். இதைத்தவிர கன்னத்து எலும்புகள் மற்றும் தாடைகளில் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சில பெண்களுக்கு கழுத்தின் மேற்பகுதியில் மெலஸ்மா ஏற்படும் என்றும், அரிதாக சில பெண்களுக்கு முன் கைகளில் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

குறைக்கும் வழிகள்

நாம் முன்னர் குறிப்பிட்டது போல இவை மகப்பேறுக்கு பின்னர் அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பிறகு தானாக சரியாகி விடும். ஆனால் இப்போது மெலஸ்மா அதிக அளவில் இருந்தால் அதை சற்று குறைக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலம் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் தேவைப்படும். மேலும்

ஃபோலிக் அமிலம் ஹைப்பர் பிக்மென்டேஷனுடன் தொடர்புடையது. எனவே நீங்கள் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். அதாவது கீரை வகைகள், ஆரஞ்சு, கோதுமை, கோதுமை பிரட் மற்றும் முழு தானிய வகைகளை உண்ணலாம். இந்த உணவுகள் உங்களுக்கு மெலஸ்மாவை குறைக்க உதவும்.

பாதுகாத்தல்

உங்கள் சருமத்தை சூரியனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் போது கூட சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். தினமும் சிறிதளவு சன்ஸ்கிரீன் உயோகித்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெளியில் செல்லாவிட்டாலும் சூரியனின் கதிர்கள் ஜன்னல் வழியாக வந்தடையும். எனவே வீட்டில் இருக்கும் போதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. மேலும், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணியலாம்.

கற்றாழை

மெலஸ்மா மற்றும் தோல் வறட்சி ஆகியவற்றில் சிகிச்சை அளிக்க கற்றாழை பயன்படுகிறது. சூரிய ஒளியில் இருந்தும் பாதுகாக்கிறது. கற்றாழை நடுவில் இருக்கும் ஜெல் பகுதியை முகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி காயவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

கன்சீல் பயன்பாடு

உங்களுக்கு உதவியாக நல்ல கன்சீல் மற்றும் பவுண்டேஷன் பயன்படுத்துங்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தும் கன்சீல் மற்றும் பவுண்டேஷன் காமெடோஜெனிக் இல்லாததாகவும், ஹைபோ அலர்ஜெனிக் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை மறைக்க வடிவமைக்கப்பட்ட ஒன்றை தேர்வு செய்யுங்கள். மேலும் அந்த கன்சீல் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றா என்பதை சரிபார்த்து வாங்குங்கள். மேலும் நீங்கள் வாங்கும் கன்சீல் உங்கள் சரும நிறத்தை விட சற்று லைட் டோன் நிறங்களை பார்த்து வாங்குங்கள். பின்னர் மெலஸ்மா ஏற்பட்ட இடங்களில் கன்சீல் அப்ளை செய்து விட்டு பௌண்டேஷன் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் முகங்களில் உள்ள புள்ளிகள் சற்று மறைக்கப்பட்டு இருக்கும்.

 

செய்ய கூடாதவை

உங்கள் முகத்தில் ஏற்பட்ட நிற மாற்றத்திற்கு அல்லது புள்ளிகளுக்கு நீங்கள் எந்த வித பீல் மாஸ்க், பிளீச், அல்லது மற்ற கெமிக்கல் உள்ள கிரீம்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. மேலும் லேசர் போன்ற எந்த விதமான முயற்சிகளையும் மேற்க் கொள்ளக்கூடாது. இது மகப்பேறுக்கு அல்லது தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் தானாக சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லையெனில் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button