மருத்துவ குறிப்பு

செரிமானக் கோளாறைப் போக்கும் பிரண்டை

பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது. பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது.
செரிமானக் கோளாறைப் போக்கும் பிரண்டை
இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம். பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் நீங்கும்.
களிப்பிரண்டையை கணு நீக்கி மிளகு, உப்பு ஆகியவற்றைச்சேர்த்து உணவாகப் புசித்து வந்தால், பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும். பிரண்டையின் அடிவேரை நீர் விட்டு நன்றாக அலம்பி, அதை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 குன்றி மணி எடை, சாப்பிட எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும். பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.
வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள். பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இரு வேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும். பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சுங்கள்.
குழம்பு பதத்தில் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கிச் சூடு தாங்கும் அளவுக்குப் பற்று போடவேண்டும். இப்படிச் செய்தால் சுளுக்கு, சதை பிரளுதல், எலும்பு முறிவினால் ஏற்பட்ட வீக்கம் ஆகியவை குணமாகும். குணமாகும் வரை வைத்தியத்தைத் தொடருங்கள். பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டை ஆண்மை சக்தியைப் பெருக்கும்.pirandai 340

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button