தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க…

தலைமுடி ஒருவரது அழகில் முக்கிய பங்கை வகிக்கிறது. முந்தைய காலத்தில் வழுக்கைத் தலையானது வயதான காலத்தில் தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தலைமுடியின் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதிக்கிறது. முக்கியமாக ஏராளமானோர் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகிறார்கள். தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அதன் விளைவாக விரைவிலேயே வழுக்கைத் தலையை பெற நேரிடும். இது ஒருவரது இளமைத் தோற்றத்தைப் பாதிக்கும்.

புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால் தான், தலைமுடி பாதிக்கப்படும் மற்றும் தலைமுடி வளர்வது தடுக்கப்படும். இத்தகைய புரோட்டீன் முட்டையில் ஏராளமான அளவில் உள்ளது. முட்டையில் அனைத்து விதமான அத்தியாவசிய புரோட்டீன்கள், தலைமுடியை வலிமைப்படுத்தும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் முட்டை முடியில் உள்ள எண்ணெயை தக்க வைப்பதோடு, தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

DIY Egg Conditioners For Hair Growth
ஆகவே அழகு நிலையங்களுக்குச் சென்று தலைமுடிக்கு பராமரிப்பு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். அதுவும் முட்டையைக் கொண்டு தலைமுடிக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

சரி, இப்போது முட்டையைக் கொண்டு எப்படி ஹேர் மாஸ்க் போடுவது என்று காண்போம். அதைப் படித்து அடிக்கடி தலைமுடிக்கு மாஸ்க் போட்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் ஆயில்
முட்டை மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் ஆயில்
* முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் கலவை தலைமுடிக்கு ஈரப்பசையை வழங்கி, தலைமுடியை மென்மையாக வைத்திருக்க உதவும்.

* அதற்கு ஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். வேண்டுமானால், சிறிது நீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

* பின் அந்த கலவையைத் தலைமுடியில் தடவி, 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மயோனைஸ் மற்றும் முட்டை
மயோனைஸ் மற்றும் முட்டை
* மயோனைஸில் உள்ள உட்பொருட்கள், தலைமுடிக்கு நல்ல கண்டிஷனர் போன்று செயல்படும்.

* ஒரு பௌலில் 2 முட்டையை உடைத்து ஊற்றி, 4 டேபிள் ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* அதன் பின் அந்த கலவையை தலைமுடியின் வேரில் இருந்து நுனி வரை நன்கு தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த தலைமுடி நன்கு வளர்ச்சிப் பெறும்.

முட்டை மற்றும் தேன்
முட்டை மற்றும் தேன்
* ஒரு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை தலையில் தடவி, ஷவர் கேப்பை அணிந்து கொள்ள வேண்டும்.

* 20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள்.

* இதனால் தேன் மயிர்கால்களை வலிமைப்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை என சில வாரங்கள் பயன்படுத்தினால், தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

தயிர் மற்றும் முட்டை
தயிர் மற்றும் முட்டை
* ஒரு பௌலில் 1/4 கப் தயிர் மற்றும் 1 முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசியப் பின், இந்த கலவையைத் தடவ வேண்டும்.

* பின்பு குறைந்தது 5 நிமிடம் தலையில் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

* இந்த செயலை நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் பயன்படுத்தலாம்.

முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்
* ஒரு பௌலில் 1 முட்டையின் மஞ்சள் கருவைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* பின்பு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

* பிறகு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

* ஒருவேளை உங்கள் தலைமுடி மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை ஷாம்பு பயன்படுத்தலாம்.

வினிகர் மற்றும் முட்டை
வினிகர் மற்றும் முட்டை
* ஒரு பௌலில் 2 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் வினிகர், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அந்த கலவையை தலையில் தடவி நன்கு ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால், தலைமுடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button