முகப் பராமரிப்பு

சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா?

பொதுவாக இன்றைய நவீன உலகில் சரும அழகை அதிகரிப்பதற்கு கடைகளில் பல அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன.

 

ஆனால் அந்த பொருட்கள் அனைத்திலுமே கெமிக்கல்கள் நிறைந்திருப்பதால், அவற்றை உபயோகித்தால், சருமத்தின் வெளிப்புறம் தான் அழகாக காட்சியளிக்குமே தவிர, உட்புறம் அல்ல.

 

இது சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியதாக அமையும். எனவே சருமத்தை இயற்கை முறையில் கூட அழகாக மாற்ற முடியும்.

 

தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
  • ஆப்ரிகாட் பழம் மற்றும் தயிரை ஒன்றாக நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால், இத்துடன் சிறிது தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கற்றாழை ஜெல்லை தினமும் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சியின்றி ஈரப்பசையுடன் காணப்படும்.
  • முட்டைக்கோஸ் ஜூஸ் உடன் சிறிது தேன் சேர்த்து கலந்து  தினமும் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.
  • கேரட் ஜூஸை தினமும் முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நன்கு காண்பீர்கள்.
  • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், சிறிது கிளிசரினை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • வெள்ளரிக்காய் ஜூஸ், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் போன்றவற்றை ஒரு பௌலில் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவ வேண்டும். இந்த கலவையை வெளியே வெயிலில் செல்லும் முன்பும், வீட்டிற்கு திரும்பி வந்த பின்பும் தவறாமல் பயன்படுத்துங்கள். இதனால் சருமம் கருமையாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். பின் அந்த பொடியை தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக் மூலம், சருமத்தில் உள்ள கருமை மற்றும் தழும்புகள் நீங்குவதோடு, சரும பொலிவும் மேம்படும்.
  • ஒரு சிறிய பௌலில் சிறிது பால், 1 சிட்டிகை உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, சருமம் பொலிவோடும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
  • ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்று. இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • ஒரு பௌலில் சிறிது கடலை எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதனை தினமும் முகத்தில் தடவி வாருங்கள். இதனால் சருமத்தில் உள்ள பிம்பிள் மற்றும் கரும்புள்ளிகள் சீக்கிரம் காணாமல் போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button