மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கு பெரும் ஆபத்தா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

டயாபெட்டீஸ் உடைய பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை பராமரிப்பது எப்படி எனத் தெரியுமா?. டயாபெட்டீஸ் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து காணப்படுவதை குறிக்கிறது.

How To Handle Pregnancy
முன்பே இருக்கும் நீரிழிவு’ அல்லது ‘முன்கூட்டியே நீரிழிவு நோய் என்பது கர்ப்ப மாகும் முன்னரே நீரிழிவு நோய் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இந்த முன் கூட்டியே டயாபெட்டீஸ் கர்ப்ப கால டயாபெட்டீஸிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இன்சுலின்

நீங்கள் டயாபெட்டீஸ் நோய் கொண்டு இருந்தால் உங்கள் உடலில் போதுமான இன்சுலின் சுரப்பதில்லை. உங்கள் இரத்தத்தில் அளவுக்கு அதிகமான சர்க்கரை காணப்பட்டால் அது மிகவும் அபாயகரமானதாக முடிந்து விடும். இது அப்படியே உங்கள் இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும்.

தாயும் குழந்தையும்

கர்ப்பட காலத்தில் பெட்டீஸ் இருப்பது குழந்தையும் தாயையும் பாதிக்கும். எனவே நீங்கள் கர்ப்பத்திற்கு முன்னரே இதை சரி செய்வது நல்லது. எனவே டயாபெட்டீஸ் நோய்க்கான சிகிச்சையை உடனே மேற்கொள்ள தயாராகுங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தாய்க்கு டயாபெட்டீஸ் இருந்தால் முன்னரே சில முன்னெச்சரிக்கை டயாபெட்டீஸ் உடைய பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தை பராமரிப்பது எப்படி எனத் தெரியுமா நடவடிக்கைகளை எடுப்பது நல்லது

கட்டுப்படுத்துதல்

உங்களுக்கு டயாபெட்டீஸ் நோய் இருந்தால் கர்ப்பமடைவதற்கு 3-6 மாதங்களுக்கு முன்னரே அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சிகிச்சை அளிக்காத டயாபெட்டீஸ் குழந்தை பிறப்பு குறைபாடு, குறை பிரசவம் மற்றும் கருச்சிதைவு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

பரிசோதனை

முன்கூட்டியே டயாபெட்டீஸ் நோய் கொண்டிருந்தால் கர்ப்ப காலத்தில் அடிக்கடி மருத்துவரை சந்தித்து உங்களையும், குழந்தையும் பரிசோதித்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு மட்டுமே உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எனவே உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆரோக்கியமான உணவு பட்டியல் பற்றி கேட்டு கொள்ளுங்கள். அவை உங்கள் சர்க்கரை அளவை கர்ப்ப காலத்தில் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

சிறப்பு மருத்துவர்

நீங்கள் நினைத்தால் பெபெரினாட்டாலஜிஸ்ட் போன்ற சிறப்பு மருத்துவரைக் கூட சந்திக்கலாம். என்டோகிரினாலஜிஸ்ட்யை சந்திப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து பேணலாம்.

டயாபெட்டீஸ் மருந்துகளை தவிர வேறு எதாவது மருந்துகளை நீங்கள் எடுத்து வந்தால் அதையும் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளலாம். இதனுடன் இரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ல் போன்றவற்றியும் பரிசோதித்து கொள்ளுங்கள். கருவுறுவதற்கு முன்னர் டயாபெட்டீஸ் உடைய பெண்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த உரையாடல் உங்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கர்ப்பத்திற்கு தயார்படுத்தும்.

நீரிழிவு நோய் எப்படி குழந்தையை பாதிக்கிறது?

நிறைய பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதற்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஆனால் சிகிச்சை பெறாவிட்டால் தீவிரமாக குழந்தையை இது பாதிக்கும். தாயின் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை குழந்தையின் இரத்தத்தில் கலந்து உடல்பருமன் அல்லது அதிகப்படியான உடல் எடையுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த சர்க்கரை பாதிப்பு பின்னாளில் குழந்தைக்கு ஹைபர் கிளைசீமியா என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குழந்தைக்கு மூச்சு விட பிரச்சனை, குறை பிரசவம், மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். இதயம் சரியாக இயங்காமல் இருந்தல், கருச்சிதைவு போன்றவை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

பிறப்புக் குறைபாடு

நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு பிறப்புக் குறைபாடு குழந்தைகள் பெற நிறையவே வாய்ப்புள்ளது.

இதயக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, தண்டுவடம் அதாவது நரம்பு மண்டல குறைபாடு போன்றவை ஏற்பட்டு குழந்தையின் உடல் உறுப்புகளின் செயலாக்கத்தையே மாற்ற நேரிடலாம். இது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உங்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் இருந்தால் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. சில உணவுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை இன்னும் அதிகப்படுத்த வாய்ப்புள்ளது.

இனிப்பு பண்டங்கள், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள். கேக்கள், ஸ்வீட்ஸ், புட்டிங்ஸ், பிஸ்கட், சோடா, சர்க்கரை சேர்த்த பழச்சாறு போன்றவற்றை தவிருங்கள்.

ஸ்டார்ச் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிருங்கள். உருளைக்கிழங்கு, அரிசி சாதம், வெள்ளை பிரட், வெள்ளை பாஸ்தா போன்றவற்றை தவிருங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுவையூட்டிகள், துரித உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றை தவிருங்கள்.

பரிசோதனைகள்

கர்ப்ப கால நீரிழிவு நோய் இருந்தால் கருவில் வளரும் குழந்தையின் உடல்நலனை அடிக்கடி காண பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

அசைவுகள்

கருவில் வளரும் குழந்தையின் அசைவுகளை கணக்கிடுதல், அல்ட்ரா சவுண்ட், அழுத்தமல்லாத பரிசோதனைகள், உயிரியல் நிபுணத்துவ ஆய்வுகள், டாப்லர் ஓட்டம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

அமினொஜென்டஸிஸ்

இந்த பரிசோதனை கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் மேற்கொள்ளப்படும். கருப்பையில் இருக்கும் அமினோட்டிக் அமிலத்தை கொண்டு குழந்தையின் நுரையீரல் வளர்ச்சியை ஆராய்வார்கள். குழந்தைக்கு குறைவான நுரையீரல் வளர்ச்சி இருந்தால் அந்த தாய்க்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதியாகிறது.

ஹைபர் கிளைசீமியா

கர்ப்ப காலத்தில் காலையில் மற்றும் இரவு நேரங்களில் மட்டும் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக காணப்பட்டால் அது ஹைபர்கிளைசீமியாவாக இருக்கக் கூடும். சாப்பிடுவதற்கு முன்னால் உள்ள குளுக்கோஸின் அளவானது 80-110 மில்லி கிராம் /dL என்ற அளவிலும் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவானது 155 மில்லிகிராம் /dL என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

கீட்டோ அசிடோஸிஸ்

கருவுற்ற பெண்கள் நீரிழிவு நோய் கொண்டிருந்தால் சிறுநீரக பரிசோதனை மூலம் கீட்டோன் அளவை கண்டறிய வேண்டும். இது தான் கீட்டோ அசிடோஸிஸ் என்ற பரிசோதனை முறை. ஏனெனில் சிறுநீரில் கீட்டோன் இருந்தால் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button