Other News

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

குழந்தை பிறக்கும் தேதியை உறுதி செய்வதற்கான அறிவியல் பூர்வமான கணக்கு ஏதுமில்லை. மாற்றாக தாய் இறுதியாக மாதவிடாய் வந்த தேதியைக் கொண்டு தோராயமாகத் தான் கணக்கிடப்படுகிறது. சில நேரங்களில் இதில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம்.

38 முதல் 42 வாரங்கள் வரை குழந்தை பிறப்பது சகஜம் இதைத் தாண்டி அதாவது 42 வாரங்களை கடந்து குழந்தை பிறக்கவில்லையெனில் ஓவர் டியூ என்று சொல்லப்படுகிறது. இதே 38 வாரங்களுக்கு முன்பு பிறந்தால் ப்ரீமெச்சூர் பேபி என்று சொல்லப்படுகிறது.

அறிகுறிகள் :

உங்களுக்கு டெலிவரி தேதியைக் கடந்து குழந்தை பிறக்கவில்லை என்றால் வயிறு நன்றாக கீழறங்கி காணப்படும். 5 முதல் 10 செ.மீ வரை இறங்கியிருக்கும். உடல் எடையில் மாற்றம் தெரியும். சருமம் மிகவும் இழுப்பது போன்று தோன்றும். டெலிவரிக்குப் பிறகு இது சரியாய் போகும். மார்பகம் வழக்கத்தை விட தளர்ந்திருக்கும்.

அவசியம் :

பொதுவாக இப்படி ஓவர் டியூ டெலிவரி ஆவது சாதாரணமானது கிடையாது. தேதி கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் நடந்திருக்கும். இதனை வாய்மொழியாக மட்டும் கணக்கிடாமல் ஸ்கேன் மூலமாக குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கண்காணிப்பு :

குழந்தையின் எலும்பு வளர்ச்சி,இதயம்,மூளை வளர்ச்சி எல்லாம் சரிபார்க்கப்படும். தொப்புள் கொடி சரியாக செயல்படுகிறதா அல்லது அதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

குழந்தை கர்பப்பையில் மிதக்க உதவிடும் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும்.

மருத்துவ ரீதியாக இதனை நீங்கள் சரிபார்த்து குழந்தையின் வளர்ச்சி பொறுத்து தேதியை மருத்துவரிடம் சரி செய்யலாம்.

இவற்றைத் தாண்டியும் டெலிவரி தள்ளிப்போகிறது. இவற்றில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனும் போது ஹார்மோன் டெஸ்ட் பரிசோதிக்கப்படும்.

காரணங்கள் :

டெலிவரி தள்ளிப் போகிறது என்றாலே பயப்பட தேவையில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு சிலருக்கு முதல் குழந்தை என்றால் பிரசவிக்கும் போது டெலிவரி தேதி தள்ளிப் போகும்.

அதே போல தேதி சரியாக கணக்கிடமால் இருந்திருப்பீர்கள். பாரம்பரியமாக உங்கள் அம்மா,அல்லது மாமியார் ஆகியோருக்கு இப்படியான தாமதமான டெலிவரி நடந்திருக்கும்.

முதல் குழந்தை தாமதமாக பிறந்தால் இரண்டாவது குழந்தையும் தாமதமாக பிறக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் அதீத உடல் எடையுடன் காணப்பட்டால் கூட டெலிவரி தள்ளிப்போக வாய்ப்புண்டு. பெரும்பாலும் ஆண் குழந்தை என்றால் தேதி தள்ளிப்போக வாய்ப்புண்டு.

என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் :

வயிற்றிலிருக்கும் குழந்தையை உயிருடன் வைத்திருக்க உதவுவது தொப்புள் கொடி தான். குழந்தை வளர வளர தொப்புள் கொடியும் வளரும் ஒரு கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி முழுமைப்பெற்றவுடன் குழந்தை வெளியேற வேண்டும்.

ஆனால் ஏதோ சில காரணங்களால் அது தடைபடும் போது குழந்தையின் தொப்புள் கொடியும் பழசாகும். அல்லது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தொப்புள் கொடியின் வளர்ச்சியும் இருக்க வேண்டும்,இல்லாத போது குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

குழந்தைக்கு சிரமங்கள் :

குழந்தை வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடையதாக வளர்ந்துவிட்டாள் டெலிவரியின் போது மிகுந்த சிரமம் உண்டாகும். இதனால் சிசேரியன் ஆப்ரேசன் செய்ய நேரிடும்.

பிறந்த பிறகு குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் மாற்றங்கள் உண்டாகலாம். குழந்தையின் உடல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அது வாழ்நாள் முழுமைக்கும் தொடரவும் வாய்ப்புண்டு,

குழந்தை முழு வளர்ச்சிப் பெற்ற பிறகும் உள்ளேயே இருந்தால் குழந்தை மிதக்க உதவிடும் அம்னியாடிக் அமிலத்தில் தொற்று ஏற்ப்பட்டு குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புண்டு.

அம்மாக்கள் செய்ய வேண்டியது :

எப்போதும் ரிலாக்ஸாக இருங்கள். குழந்தை பேறு குறித்த அதீதமான கற்பனை,வீண் பயம் போன்றவையே நினைத்து உங்களுக்கு மனரீதியாக குழப்பத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள் தொடர்ந்து குழந்தையின் வளர்ச்சி குறித்தும், அசைவுகள் குறித்தும் கண்காணித்திடுங்கள். தேதி தள்ளிப் போகிறது என்றால் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுத்து விடுவர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button