ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?

பிறந்த குழந்தையே ரோஜாப்பூ போன்று அழகாய் இருக்கும் போது அதை மேலும் அழகுப்படுத்தும் விதமாக கண் மைகளால் அழகுப்படுத்தும் அம் மாக்கள் இந்தியாவில் தான் அதிகம்.

பாரம்பரியமாக குழந்தைக்கு கறுப்பு பொட்டு வைத்து திருஷ்டியைக் கழிக்கும் என்று சொல்லிக் கொள்கி றோம். மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.
ytutiu

பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள். குட்டிக் கண்களுக்கு மையிட்டு கண்களை இன்னும் அழகாக காட்டுவதற்கு மை இட்டா லும் திருஷ்டி கழியவே கண் மை என்று சொல்வார்கள்.
தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. மேலும் விரல் இடுக்குகளில் இருக் கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
fuyfiyiu

வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது. அதைத் தயாரிப்பதும் எளிதானதே. எப்படி தயாரிக்க லாம் என்பதைப் பார்க்கலாமா?
வெள்ளையான சுத்தமான மஸ்லின் துணியை எடுத்து ஒரிஜினல் சந்தன குழைச்சலில் ஊற வைக்கவும். இதை நிழலில் உலர்த்தி காயவிடுங்கள். பகல்முழுவதும் காயவைத்து மாலைநேரம் சிறு திரியாக கிழித்து வையுங்கள். சந்தனக்கட்டையில் சந்தனத்தை உரைத்த கொள்ளுங்கள்.அகன்ற மண் அகல் விளக்கில் நிறைய விளக்கெண்ணெய் விட்டு அதில் திரியை வைக்கவும். சந்தனகுழைச்சலில் ஊறவைத்த துணியை திரியாக்கி வைக் கவும். செம்பு தட்டின் உள்ளே சந்தனத்தை தடவுங்கள். இப்போது அகல் விளக்கில் திரி ஏற்றி செம்பு தட்டில் தடவியிருக்கும் சந்தனமானது திரி யின் தீபம் படும்படி வைக்கவும். விளக்கு அணையாமல் இருக்கும்படி இலேசாக காற்று வரும்படி வைக்கவும்.

இரவு முழுவதும் எரிய விட்டு மறுநாள் காலை செம்பு தட்டை நிமிர்த்தினால் அதில் சந்தனக் கரி தட்டில் பதிந்திருக்கும். அந்தக் கரியை ஒரு ஸ்பூ னால் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைக்கவும். பிறகு இதில் விளக்கெண்ணெய் கலந்து நன்றாக குழைத்தால் கண் மை தயார். விளக் கெண்ணெய்க்கு பதிலாக நெய் கலந்தும் குழைக்கலாம். ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். 100 சதவீதம் இயற்கையான கண்களுக்கு குளிர்ச் சித் தரக்கூடியது.

கடைகளில் கண் மை வாங்கி பயன்படுத்துவதை முடிந்தவரைத் தவிருங்கள். குழந்தைகளின் கண்களைப் பாதுகாப்பாக ஆரோக்யமாக வைத்தி ருக்க இயற்கை கண் மை நல்லது. மேலும் பாதுகாப்பானது குழந்தையின் கண்களில் கண் மை இடாமல் நெற்றியின் ஒரு ஓரத்தில் வைப்பது தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button