சிற்றுண்டி வகைகள்

முட்டை கோதுமை நூடுல்ஸ்

தேவையான பொருள்கள் :

கோதுமை நூடுல்ஸ் – 150 கிராம்
முட்டை – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
குடமிளகாய் – 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை – சிறிது

செய்முறை :

* முதலில் ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது உப்பு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் கோதுமை நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும். நூடுல்ஸ் வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டியில் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைக்கவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை போட்டு உதிரியாக (பொடிமாஸ்) செய்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, குடமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து மூன்று மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி சுருள வதங்கியதும் குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, சோயா சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

* வதக்கியவற்றுடன் முட்டை பெடிமாசை சேர்த்து சேர்த்து ஒன்றாக கிளறவும்.

* இப்போது நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

* கொத்தமல்லித் தழையை சேர்த்து பரிமாறவும்.

* சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.

f8639207 6421 40d9 a519 949dd092d2fe S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button