மருத்துவ குறிப்பு

உங்களால் 45 நொடியில் இதனை செய்ய முடியலனா உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

உலக இதய அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் இறப்புகளுக்கு இதய நோய்கள் ஒரு முக்கிய காரணமாகும். எந்த வயதிலும் இதய நோய் ஏற்படலாம், ஆனால் வயதுக்கு ஏற்ப ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால் இதய ஆரோக்கியத்தை சோதிப்பதற்கான வழக்கமான முறைகள் விலை உயர்ந்தவை மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்வதால் பலர் தங்கள் இதய பிரச்சினைகளைப் பற்றி சரியான நேரத்தில் அறிந்து கொள்வதில்லை.

அதிர்ஷ்டவசமாக, நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய ஒரு சோதனை உள்ளது, மேலும் இந்த சோதனையை செய்ய ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும். வீட்டிலேயே உங்கள் இதயத்தை ஆரோக்கியத்தை சோதிக்க உதவும் எளிதான முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆராய்ச்சி

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் 45 விநாடிகளில் படிக்கட்டுகளில் நான்கு அடி ஏற முடியும் என்று 2020 டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆய்வில் கரோனரி தமனி நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட 165 அறிகுறிகளை கொண்டவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த நபர்கள் கடுமையான உடற்பயிற்சியைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், பின்னர் விரைவாக நான்கு அடி நீளமுள்ள படிக்கட்டுகளில் (60 படிக்கட்டுகள்) எந்த இடைவெளியும் இல்லாமல் ஏற அறிவுறுத்தப்பட்டனர்.

ஆராய்ச்சி முடிவுகள்

ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் செயல்பாடுகளின் நேரம் பதிவுசெய்யப்பட்டது மற்றும் அவற்றின் உடற்பயிற்சி திறன் வளர்சிதை மாற்ற சமமாக MET அளவில் அளவிடப்பட்டது. MET என்பது ஓய்வெடுக்கும்போது உட்கொள்ளும் ஆக்ஸிஜனின் அளவு என வரையறுக்கப்படுகிறது. 40-45 வினாடிகளுக்குள் படிக்கட்டுகளைக் ஏறும் நோயாளிகள் 9 முதல் 10 MET வரைக்கும் அதிகமானதை அடைந்துள்ளனர், இது குறைந்த இறப்பு விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

படிக்கட்டை ஏறுவதற்கு 90 வினாடிகளுக்கு மேல் தேவைப்பட்டால் நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். 60 படிக்கட்டுகளில் ஏற ஒரு நிமிடம் 30 வினாடிகளுக்கு மேல் எடுத்தால், உங்கள் இதய ஆரோக்கியம் மோசமாக இருக்கிறது, நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். படிக்கட்டுகளில் ஏற 90 வினாடிகளுக்கு மேல் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் எடுத்தவர்கள் 8 MET-க்கும் குறைவான மதிப்பெண்ணை அடைந்தனர். இது இதயக்கோளாறால் இறப்பவர்களின் இறப்பு விகிதத்தில் 2 முதல் 4 சதவீதத்தை குறிக்கிறது.

எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

உடற்பயிற்சியின் போது நோயாளியின் இதயங்களின் படங்கள் அவர்களின்ன் இருதய செயல்பாட்டை மதிப்பிடுகின்றன. 90 வினாடி அல்லது அதற்கு மேல் தேவைப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் அசாதாரண இதய செயல்பாட்டைக் கொண்டிருந்தனர். இதய நோய் என்பது வயதானவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆண்களுக்கான ஆபத்து 45 வயதிற்குப் பிறகு அதிகரிக்கிறது, பெண்களுக்கு 50 வயதிற்குப் பிறகு ஆபத்து அதிகரிக்கிறது.

அமைதியான மாரடைப்புகள்

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் 2016 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, 45 சதவீத மாரடைப்புகள் அமைதியான மாரடைப்புகளாக இருக்கிறது, அதாவது அவை அறிகுறி இல்லாமல் ஏற்படுகின்றன. இது இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதை மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது. அமைதியான மாரடைப்புகள் சாதாரண மாரடைப்புகளைப் போலவே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button