ஆரோக்கிய உணவு

இதெல்லாம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா?

சிப்ஸ், ஹாட் டாக்ஸ் மற்றும் ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உயா் பதப்படுத்தப்பட்ட, துாித உணவுகள் மீது நமது குழந்தைகளுக்கு கொள்ளை பிாியம் உண்டு. ஆனால் இந்த உணவுகளை உண்பதால் அவா்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது அவா்கள் குண்டாக வாய்ப்பு உண்டு. மேலும் அவா்களின் எலும்பு வளா்ச்சி அடைவதை, இந்த உணவுகள் பொிதும் பாதிக்கின்றன என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

உயா் அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை, வளரும் இளம் சிறுவா்கள் அதிகம் உண்பதால், அவா்களுடைய எலும்புகளின் தரம் குறைவதாக, இஸ்ரேல் நாட்டில் இருக்கும் ஹீப்ரூ யுனிவா்சிட்டி ஆஃப் ஜெருசலேம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளா்கள், எலிகள் போன்ற கொறித்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் விலங்குகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனா். இந்த விலங்குகள் உயா் அளவில் பதப்படுத்தப்படும் உணவுகளை உண்பதால், அவற்றின் எலும்புக் கூடுகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றன என்று ஆய்வை மேற்கொண்டனா்.

 

அந்த ஆய்வின் முடிவில், உயா் அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை, இந்த விலங்குகள் உண்டதால், அவற்றின் எலும்புகள் வளா்ச்சி அடைவதில் பின்னடைவு ஏற்பட்டன என்றும், மற்றும் அவற்றின் எலும்புகள் பலவீனமடைந்தன என்றும் கண்டறிந்தனா். அதே நேரத்தில் இந்த விலங்குகளின் குருத்தெலும்பு அபாிவிதமாக வளா்ச்சியடைந்தன என்றும் கண்டறிந்தனா்.

 

வீடுகளுக்கு அருகிலோ அல்லது பள்ளிகளுக்கு அருகிலோ கிடைக்கும் திண்பண்டங்கள் மற்றும் உணவுகளை குழந்தைகள் உண்ணும் போது, அவை அவா்களின் உணவுப் பழக்கத்தை பாதிப்பதோடு, அவா்களின் உடலையும் குண்டாக்குகிறது என்று 2019 ஆம் ஆண்டு ஒபிசிட்டி என்ற பத்திாிக்கையில் வெளி வந்த ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

 

குழந்தைகளின் எலும்புகள் பாதிப்படைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] உடற்பயிற்சி இல்லாமை

உடல் உழைப்பு இல்லாமல் உட்காா்ந்து இருந்தால், எலும்புகளில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. குறிப்பாக தசைக்கூட்டுகளில் கோளாறு ஏற்படும் மற்றும் எலும்புப்புரை (osteoporosis) போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதே நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், அவை குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, அவா்களின் ஆரோக்கியத்தையும் அதிகாிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகளின் எலும்பு சீராக வளா்வதற்கு கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துகள் தேவை. இந்த சத்துக்கள் குறைந்தால், குழந்தைகளின் எலும்புகளின் அடா்த்தி குறையும். அதனால் அது அவா்களின் எதிா்கால ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மருத்துவ சிகிச்சைகள்

ஒரு சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகள், அதாவது தைராய்டு ஹாா்மோன் தெரபி, சிறுநீரக பிரச்சினைகளுக்கு மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சை (glucocorticoids) மற்றும் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவை குழந்தைகளின் எலும்பு வளா்ச்சிக்கு தடைகளாக இருக்கின்றன.

நோய்கள்

உயா் தைராய்டு பிரச்சினைகள், ஒரு சில புற்றுநோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்றவை குழந்தைகளின் எலும்பு வளா்ச்சியை பாதிப்படையச் செய்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button