ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? பருவமடைந்த பெண்ணை எப்படி பார்த்துக்கணும் தெரியுமா?

பருவம் அடைவது என்பது குழந்தை பருவத்தில் இருந்து குமரி பருவத்திற்கு செல்வதாகும். மகள்களை பெற்ற எல்லா அம்மாக்களுக்கும் தனது குழந்தையின் பருவமடைவது பற்றிய கவலை இருக்கும். ஒன்பது அல்லது பத்து வயதில் பருமடைந்துவிட்டால், அந்த குழந்தைக்கும் ஒன்றும் புரியாது. அம்மாவாலும் புரிய வைக்க முடியாது. இது சற்று சிரமமான விசயம் தான்.

இந்த பகுதியில் பருவமடைந்த பெண்ணை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

சீக்கிரமாக பருவமடைதல்

இன்றைய சூழ்நிலையில் கிடைக்கும் பாஸ்ட் புட் உணவுகள், இறைச்சி, அதிக சத்துள்ள உணவுமுறைகள் காரணமாக சீக்கிரமாக பருவமடைதல் உண்டாகிறது. கடந்த 1860 ஆம் ஆண்டில் பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது 16.6 என்ற அளவில் இருந்தது.

ஆனால் இப்போது படிப்படியாக குறைந்து, 2010ம் ஆண்டில் பெண்களின் பூப்பெய்தும் வயது 10.5 ஆகக் குறைந்துவிட்டது. தற்போது இந்தியாவில் பருவமடையும் சராசரி வயது ஒன்பதாக உள்ளது. இன்னும் சில வருடங்களில் பருவமடையும் வயது 6 ஆக மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

உணவுகள்

இந்த வயதில் பெண் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து மிகவும் முக்கியம். இரும்புச்சத்து மிக்க கீரை, முருங்கைக்காய், மீன் வகைகள், முட்டை ஆகியவை அதிக அளவு கொடுக்கவேண்டும்.

கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் போன்றவற்றை உணவில் தினமும் சேர்க்க வேண்டும்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பருவமடைந்த உடன் தர வேண்டியவை

பருவம் அடைந்தவுடன் வேப்பிலைக் குருத்துடன் மஞ்சளும், சர்க்கரையும் அரைத்து, காலையில் இரண்டு நெல்லிக்காய் அளவு கொடுக்க வேண்டும்.

சுத்தமான நல்லெண்ணை ஒரு மேசைக் கரண்டி காலையில் கொடுக்க வேண்டும்.

உழுந்தையும், சின்ன சீரகத்தையும் அரைத்து நல்லெண்ணை தோசை சுட்டுக் கொடுக்க வேண்டும்.

உடலில் உண்டாகும் மாற்றங்கள்

பெண்களுக்கு பருவம் அடைந்தவுடன் மாதவிடாய் ஏற்படுவது, மார்பகங்களில் வளர்ச்சி, அக்குள், அடிவயிறு, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளில் ரோமங்கள் வளர்வது ஆகியவை ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்கின்றன. இயற்கையான இவ்விஷயங்களை எதிர்கொள்ளும் போது டீன் ஏஜ் பருவத்திலுள்ளவர்கள் பயப்படலாம். தாய் தான் தனது பெண்ணுக்கு இந்த சமயத்தில் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

மாதவிடாய் பிரச்சனை

பருவமடைந்த உடன் அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கான நிலைக்கு வந்துவிடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி 28 முதல் 32 நாட்களுக்குள் நடைபெறும். சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இருந்தால் சாதரணமாக நினைக்காமல் சரி செய்வது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button