ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்று தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

சோர்வு எனும் உணர்வானது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய சாதாரணமான உணர்வாகும்; ஆனால், எப்பொழுதும் சோர்வு ஏற்பட்டால், இந்த சாதாரண உணர்வும் அசாதாரணமாகிவிடுகிறது. அதிகமான வேலை செய்வதால் நம் உடல் சோர்வடைந்து விடுவதாக நாம் எண்ணுகிறோம்; ஆனால், அவ்வளவாக பெரிய வேலை எதையும் செய்வது கிடையாது, இருப்பினும் அவர்கள் மிகவும் சோர்வாக, தொய்ந்து போய் காணப்படுகின்றனரே அதற்கு என்ன காரணம்?

Why Kids Are Getting Too Much Tiredness?
குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்பது குறித்த தகவல்களை பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்போஹைட்ரேட் சத்துக்கள்!
கார்போஹைட்ரேட் சத்துக்கள்!
பொதுவாக நம் உடலில் ஆற்றலை தோற்றுவித்து, நாம் சக்தியுடன் செயலாற்ற உதவுவது கார்போஹைட்ரேட் சத்துக்கள் தான். குழந்தைகள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் அவர்களால் எந்த ஒரு செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது; குழந்தைகள் சோர்வாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவை உட்கொண்டு வருவது தான். ஆகையால் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அளிக்க வேண்டியது அவசியம்..!

சுறு சுறுப்பு அவசியம்!
சுறு சுறுப்பு அவசியம்!
உடல் உழைப்பு சிறிதுமின்றி வாழும் வாழ்க்கை மனிதர்களை சோர்வடைய செய்து விடும். குழந்தைகள் பால்ய பருவத்தில் பெரிதாக எந்த உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையும் செய்ய முடியாது; செய்வதும் நல்லது அல்ல. ஆனால் அதற்கு பதிலாக குழந்தைகள் சுறுசுறுப்புடன் விளையாடுவது, எப்பொழுதும் உறங்கி வராமல் உற்சாகமாக சுற்றி திரிவது போன்ற செயல்களை மேற்கொண்டு வந்தாலே போதும்.

குழந்தைகள் பார்க்கும் சுறுப்புறம் அவர்களை சோர்வடைய விடாது; மேலும் சுற்றி திரிவதனால் ஏற்படும் பசி உணர்வு அவர்களை நன்கு சாப்பிட தூண்டி பசி மற்றும் சோர்வை அவர்கள் உடலில் இருந்து விரட்டி விடும்.

உறக்க முறை!
உறக்க முறை!
சரியான உறக்கம் கொள்ளாமல் இருப்பதும், சரியான நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்தெழாமல் இருப்பதும் உடலில் சோர்வை ஏற்படுத்தும் காரணங்களாக உள்ளன. எனவே குழந்தைகள் நேரத்திற்கு உறங்கி எழுவதை கவனித்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். மேலும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு அளித்து, அவர்களை உறங்க செய்து, சுறுசுறுப்புடனும் இருக்கும் வண்ணம் அன்றாட பழக்க வழக்கங்களை கற்று கொடுக்க வேண்டும்.

புரதம் அவசியம்!
புரதம் அவசியம்!
உடலின் புரத அளவு போதுமானதாக இல்லை என்றால், உடலின் உடற்செயலிய நிகழ்வுகள் சரிவர நடைபெறாது, உடலில் சோர்வு ஏற்படும். குழந்தைகள் பிறந்த பின் தங்களது வளர்ச்சி காலகட்டத்தில் சரியாக வளர புரதச்சத்து அவசியம்; ஒரு நாளைக்கு குறைந்தது 800 – 1000 கலோரிகளையாவது குழந்தைகள் உட்கொள்ள வேண்டும். இது அவர்களின் உடலில் சோர்வு ஏற்படாமல் காத்து, அவர்களை உற்சாகமாக இருக்க உதவும்.

மேலும் படிக்க: மனைவியின் பிரசவத்தை பற்றி கணவர்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

தண்ணீர்! தண்ணீர்!
தண்ணீர்! தண்ணீர்!
குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்டிப்பாக அவர்களால் சரியாக செயலாற்ற முடியாது; எப்பொழுதும் சோர்ந்து போய் தான் காட்சி அளிப்பர். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனதே! நம் உடல் சீராக, சரிவர இயங்க அதற்கு போதுமான அளவு நீர்ச்சத்து அவசியம் ; நீர்ச்சத்து போதுமான அளவு இருந்தால் தான் செல்கள் புத்தாக்கம் பெற்று, உடல் உற்சாகத்துடன் செயல்படும்.

ஆகவே இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த நீர்ச்சத்தினை உங்கள் குழந்தைகள் சரியாக பெறுகிறார்களா என்று பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
உடலும் சரி, மனமும் சரி விரைவில் சோர்வடைய மிக முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். குழந்தைகளின் மனம் எதனால் அழுத்தம் பெறப்போகிறது என்று பெற்றவர்கள் எண்ணலாம். ஆனால் குழந்தைகள் பெற்றோர் போடும் சண்டை, தனது படிப்பு மற்றும் நண்பர்களுடன் ஏற்படும் சண்டை, செல்லப்பிராணியின் பிரிவு அல்லது இறப்பு போன்ற விஷயங்களை குறித்து மனவருத்தம் அடைவர்.

அந்த வருத்தம் காலப்போக்கில் மனஅழுத்தமாய் மாறி அவர்களின் குழந்தை தன்மையை கொன்று விடுகிறது. எனவே குழந்தைகள் சந்தோஷமான மனநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை ஆகும்.

உடலின் நோய்கள்!
உடலின் நோய்கள்!
மனித உடலில் அனீமியா, இதய பலவீனம், உறக்கமின்மை, இரும்புச்சத்து குறைபாடு, தைராயிடு போன்ற குறைபாடுகள் இருந்தால், இந்த குறைபாடுகள் உடலில் சோர்வினை மிக எளிதில் உருவாக்குகின்றன. குழந்தைகள் எந்நேரமும் சோர்வாக இருந்தால் அதற்கு அவர்களின் உடல் சுகவீனம் அடைந்து பலவீனமாக இருப்பது முக்கிய காரணமாகலாம். ஆகவே குழந்தைகளின் உடலில் இந்த நோய்க்குறைபாடுகள் இருந்தால் அவற்றை விரைவில் குணப்படுத்த பெற்றோர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button