கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் !

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

⭕ பெண்களுக்கு பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் மிக முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் அறிந்து கொள்ளலாம்.

⭕ பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

⭕ கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

⭕ சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

⭕ ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

⭕ ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
prgnancy

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button