ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா? மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுபவர்களுக்கு இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் கூடாதாம்…!

உடற்பயிற்சிகள் உங்கள் உடலை மட்டும் பிட்டாக்க உதவுவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடும்.

ஆனால் சில நோய்க்குறிகள் கொண்டவர்கள் சில வகை உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதய நோயாளிகள் ரொம்ப கடினமான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என்பது போல குடல் எரிச்சல் நோய்க்குறி கொண்டவர்களும் சில உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் சில வகை உடற்பயிற்சிகள் உங்கள் குடல் நோய்க்குறிகளை தூண்டும் என்கிறார்கள்.
எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி

எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவு முறையை கையாள வேண்டும். அதே நேரத்தில் உங்கள் உடல் செயல்பாட்டையும் அதற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடல் எரிச்சல் நோய்க்குறி கொண்டவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்யும் போது குடலியக்கத்தை மேலும் பாதிக்கிறது. இதனால் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அறிகுறிகள் மோசமடையக்கூடும். ஆகவே கீழ்க்கண்ட உடற்பயிற்சிகளை தவிர்க்கலாம்.
rtghrtyt

ஓடுதல்

பொதுவாக தினமும் காலையில் எழுந்து ஓடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது தான். இது கால்களின் தசைகளை வலிமைப்படுத்துகிறது. உங்கள் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் உங்களுக்கு குடல் எரிச்சல் நோய்க்குறி இருக்கும் சமயத்தில் இப்படி ஓடுவது வயிற்றுப் பிடிப்பிற்கு வழிவகுக்கும். இது வயிற்றுப் போக்கை மேலும் அதிகப்படுத்தக் கூடும். நிலைமையை மோசமடைய செய்யும். நீங்கள் தொடர்ச்சியாக ரன்னிங் செய்வதால் இந்த பிரச்சினை உண்டாகிறது.

கிராஸ் ஃபிட் மற்றும் எடை தூக்குதல்

கிராஸ்ஃபிட் ஒரு சக்திவாய்ந்த மற்றும் திடீர் இயக்கத்துடன் கூடிய வேகமான பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சிகளில் அடிக்கடி உட்கார்ந்து எந்திருத்தல், எடையை தூக்குதல் போன்றவை வயிற்றைச் சுற்றி நிறைய அழுத்தங்களை உண்டாக்கக் கூடும். எனவே இது உங்கள் குடல் எரிச்சல் நோய்க்குறியை மேலும் தீவிரப்படுத்தி விடும்.

பந்து விளையாட்டு

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க நிறைய பேர்கள் பந்து விளையாடுகிறார்கள். இது உங்கள் இதயத்துடன் உடலின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. ஆனால் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்காது. பந்து விளையாட்டை விளையாடும் போது உடலின் வேகமான இயக்கம் மற்றும் துள்ளல் வயிற்று வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது வயிற்று தசைப்பிடிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உயர் தீவிர உடற்பயிற்சி

உயர் தீவிர உடற்பயிற்சி என்பது குறைந்த நேரத்தில் உங்களுக்கு அதிக தீர்வை கொடுக்கும். இது உங்கள் தசைகளை கட்டுக்கோப்பாக மாற்றவும், கொழுப்புகளை சீக்கிரம் எரிக்கவும் உதவலாம். ஆனால் இது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது. உங்களுக்கு மலச்சிக்கலோ அல்லது குடல் எரிச்சலோ இருந்தால் இதைச் செய்யாதீர்கள்.

எனவே குடல் எரிச்சல் நோய்க்குறி கொண்டவர்கள் மேற்கண்ட உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button