சமையல் குறிப்புகள்

சூடான உருளைக்கிழங்கு அவல் உப்புமா

தேவையான பொருட்கள்:

* அவல் – 2 கப்

* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து சிறு துண்டுகளாக்கப்பட்டது)

Related Articles

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3-5 (பொடியாக நறுக்கியது)

* வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

* தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர், உப்பு, 1/2 டீஸ்பூன் சக்கரை, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

* பின் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

Potato Aval Upma Recipe In Tamil
* பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை அதிகரித்து, உருளைக்கிழங்கை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் அவலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவல் நன்கு சூடானதும், மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு அவல் உப்புமா தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button