பெண்கள் மருத்துவம்

எடைகுறைந்த குழந்தையின் உணவு முறை

எடைகுறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும். டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால் தாய்ப்பால் இல்லாத நேரத்தில் பால்பொடி மூலம் பால் கொடுக்கலாம்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் கொடுப்பதைத் தடுக்கவும் 32 வாரத்திற்கு மேல் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரங்களுக்குக் கீழ் இருந்தால் குழாய் மூலம் தாய்ப்பால் பீய்ச்சி எடுத்து கொடுக்கலாம். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் பால் கொடுப்பது மிகவும் நல்லது.

32 வாரத்திற்கு கீழ் பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த ஒரு வாரத்திற்குக் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதனால் குழந்தையின் குடல் வளர்ச்சி அடையும். குறைந்த அளவு பால் கொடுப்பதன் மூலம் குடல் அழற்சி போன்ற நோய்கள் தடுக்கலாம். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம். உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை மூலம் பால் கொடுக்கலாம்.
குழந்தையின் எடையைப் பொறுத்தும், கருதாங்கல் வாரங்களைப் பொறுத்தும் எத்தனை முறை பால் கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

தாய்ப்பாலில் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை. இதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு வைட்டமின் டி 400 கொடுக்க வேண்டும்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கல்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக இருக்கும். எனவே கல்சியம் 120 140 மி.கி.ஃ.கி.கிஃ நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90 மி.கி.ஃ.கி.கிஃ நாள் கொடுக்க வேண்டும்.

குழந்தையின் எடை, தலைச்சுற்றளவு, நீளம் மற்றும் மார்பகச் சுற்றளவு பார்க்க வேண்டும். அதன் மூலம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
mother and baby2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button