மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஃபுளு காய்ச்சலை சரிசெய்ய உதவும் 10 உணவுகள்!!!

புளு காய்ச்சல்/சளிக்காய்ச்சல் என்பது எரிச்சலை உண்டாக்கும் ஒரு நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு குமட்டல்கள் உண்டாகி, சில காலம் படுக்கையில் இருக்க கூட வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும். அதிக காய்ச்சலோடு நாள் முழுவதும் கட்டிலில் படுத்திருந்தால் கோபம் ஏற்படும் தானே? சோர்வு மற்றும் குமட்டல் போன்ற காரணங்களாலேயே ஃபுளு காய்ச்சல் உங்களை கோபப்படுத்தும்.

ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டுள்ள நேர்த்தியான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அவை வீட்டில் தயார் செய்யப்பட ஆரோக்கியமான உணவுகளாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளை உண்ணும் போது விரைவிலேயே நோய் பறந்தோடும். ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சலுக்கு பிறகு சத்து குறைவுடன் சோர்வாக காணப்படுவார்கள். அதனால் சரியாக உணவருந்தினால், போதுமான ஆற்றல் திறனை மீதும் பெறலாம்.

ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு உணவுகள் உதவி புரியும். ஃபுளு காய்ச்சலுக்கான உணவுகள், ஃபுளு காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, விரைவிலேயே குணப்படுத்தும். ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் சில உணவுகள் பற்றி பார்க்கலாமா?

பழங்கள்

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இயற்கையாகவே உள்ளது. மிதமான, சுலபத்தில் செரிமானம் ஆகக்கூடிய பழங்களான ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மற்றும் இதர பழங்களே அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு மீண்டும் நீர்ச்சத்தை பெற்று தரவும் பழங்கள் உதவுகிறது. அதனால் இது ஃபுளு காய்ச்சலை எதிர்த்தும் போராடும். நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருவது, ஃபுளு காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும். பழங்கள் என்பது இயற்கையாக கிடைக்க கூடிய ஃபுளு காய்ச்சலுக்கான உணவாகும்.

சாலட்

ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பாத்திரத்தில் சாலட்டை நிரப்பி உண்ணலாம். சாலட்டில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் வளமையாக உள்ளது. புரதம் மற்றும் கார்போஹைட்ரேட், ஃபுளு காய்ச்சலால் இழந்த உங்கள் ஆற்றல் திறனை மீட்டு தரும். வெள்ளரி, கேரட், போன்ற மிதமான காய்கறிகளை சீரான முறையில் உட்கொள்வது ஃபுளு காய்ச்சலுக்கான சிகிச்சையாக அமையும்.

ஜூஸ்

ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு காய்கறி மற்றும் பழச்சாறுகள், என இரண்டு வகைகளுமே பயன்படும். ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கான உணவுகளில், கண்டிப்பாக அதிகளவிலான புரதம் மட்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜூஸ்களான, கேரட் ஜூஸ், தக்காளி ஜூஸ், பெர்ரி ஜூஸ் மற்றும் சிட்ரஸ் பழச்சாறுகள் இருந்தாக வேண்டும்.

பிரவுன் பிரட் மற்றும் பூண்டு

பூண்டில் நுண்ணுயிர்க் கொல்லி பண்புகள் அடங்கியுள்ளதால், அது ஃபுளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்களை எதிர்த்து போராடும். பிரவுன் பிரட்டில் புரதச்சத்து வளமையாக உள்ளது. அதனால் இது உடலுக்கு ஆற்றல் சக்தியை கொடுக்கும். பிரவுன் பிரட் மற்றும் பூண்டை சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது, ஆற்றல் சக்தியை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதனால் ஃபுளு காய்ச்சலை எதிர்த்து போராட உதவும்.

இஞ்சி டீ

இஞ்சி என்பது ஃபுளு காய்ச்சலுக்கான இயற்கை நிவாரணியாகும். ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உணவுகளில், நீண்ட காலமாகவே இஞ்சி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இஞ்சியில் அழற்சியை நீக்கும் குணங்களும் நுண்ணுயிர்க் கொல்லி குணங்களும் அடங்கியுள்ளதால், ஃபுளு காய்ச்சலை குறைத்து அதற்கு எதிராக போராடும்.

வாழைப்பழம்

சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய லேசான பழம் தான் வாழைப்பழம். ஃபுளு காய்ச்சலுக்கு, வாழைப்பழ மில்க் ஷேக் அல்லது சர்க்கரை கலந்த வாழைப்பழம், இயற்கையான சிகிச்சையாக விளங்கும். குமட்டல், சோர்வு மற்றும் வாந்தி ஏற்படும் போது வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். பொதுவாக, மருத்துவர்கள் வாழைப்பழத்தை, முக்கியமாக வயிற்று ஃபுளு காய்ச்சலின் போது பரிந்துரைப்பார்கள்.

புதினா மிட்டாய்

ஃபுளு காய்ச்சலின் போது தொண்டையில் ஏற்படும் வறட்சி மற்றும் புண்களை இதப்படுத்த உதவும் புதினா. மேலும் உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்கவும் நாவின் சுவையை மாற்றவும் அது உதவும். ஃபுளு காய்ச்சலின் போது புத்துணர்வை பெற புதினா மிட்டாய்கள் உதவும்.

வான்கோழி

வான்கோழியில் அதிகமான புரதமும் குறைவான கொழுப்பும் அடங்கியுள்ளது. அதனால் வான்கோழி மூலம் திண்மமான ஊட்டச்சத்துக்களை பெறலாம். அதனால் இயற்கையான முறையில் ஃபுளு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்திட வான்கோழி உதவும்.

சூப்கள்

ஆரோக்கியமான காய்கறி மற்றும் சிக்கன் சூப்கள், ஃபுளு காய்ச்சலின் போது உங்களுக்கு ஆற்றல் திறனை அளிக்கும். சூப்கள் உங்கள் உடலுக்கு வெதுவெதுப்பை ஏற்படுத்தி லேசாக இருக்கும்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளது. இது ஃபுளு காய்ச்சல் சிகிச்சைக்கும் கரகரப்பான தொண்டைக்கு நிவாரணியாகவும் விளங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button