மருத்துவ குறிப்பு

கேன்சரை எதிர்த்து போராடும் இஞ்சி

புரோஸ்டேட் புற்றுநோய் கடந்த சில வருட காலப்பகுதியில் மிகவும் ஆபத்தான மற்றும் மேல்-சிகிச்சை புற்றுநோய்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

50 வயது உள்ள ஆண்களை இந்நோய் தாக்குகிறது. ஆண்களில் 40 சதவீத பேர்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றி தெரியாமல் பாதிக்கப்படுகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவை மற்ற இடங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.

இவற்றை முற்றிலுமாக தடுக்க முடியும். இங்கே எந்த பக்க விளைவுகள் இல்லாமல் நோய்களை குறைக்கலாம். புற்றுநோய் எதிராக போராட உதவும் ஒரு மந்திர மூலிகை இஞ்சி.

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க சங்கம் நடத்திய ஆய்வில் இஞ்சி தூள் புற்றுநோய் செல்களை அழிப்பதில் உள்ள 100% திறமையான சக்தி கொண்டவை என்று கண்டறியப்பட்டது.

இஞ்சியின் குணங்கள்:
1453894595 0931
இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சி, பசியைத் தூண்டிவிடும். உணவை செரிக்க வைக்கும்

சுரப்பிகளை சுரக்க வைக்கும், மூட்டுக்களுக்கு வலு சேர்க்கும் தலை சுற்று மயக்கம் போக்கும், உடல்வலி, சளி இருமலைப் போக்கும்.

திரிகடுக சூரணத்தில் இஞ்சி சேர்க்கப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா செரியாமை சுவையின்மை ஆகியவற்றை குணமாக்கும் உணவு செரிக்கும் இரைப்பை, சிறு குடல், பெருகுடல் ஆகியவற்றை செயல் பட வைக்கும்.

சாப்பிடும் முறை: தோல் எடுத்த இஞ்சியைப் பொடிபொடியாக நறுக்கி தேனில் ஊறவைக்கவும் தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். பசி எடுக்கும் உணவு செரிக்கும். தலை சுற்றல், மயக்கம் தீரும் நாம் வழக்கமாக சாப்பிடும் பழச்சாறுகளில் இஞ்சியை நசுக்கிப் போட்டு வடிகட்டி பருகினால் நல்ல மனமும், சுவையும் கிடைக்கும்.

மோரில் இஞ்சி தட்டிப்போட்டு உப்புப் போட்டு பருகினால் மேலும் பல உடல் நலன்கள் ஏற்படும். இப்படி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மேற்சொன்ன பல வியாதிகள் தீரும்.

இப்படி சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், நாம் அன்றாடம் செய்யும் தேங்காய் சட்னி தக்காளிக் குருமா கொத்து மல்லிப் புதினாத் துவையல் இவைகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டு சாப்பிடலாம்.

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளிரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button