எடை குறைய

கொழுப்பைக் கரைக்கும் குளு குளு சிகிச்சை!

மாறும் வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், அதீத மன அழுத்தம் என பருமனுக்குப் பல காரணங்கள். இதன் எதிரொலியாக பருமனைக் குறைக்கும் சிகிச்சைகளும் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. உடலில் இருக்கும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லைப்போசக்‌ஷன், குடலின் ஒரு சிறுபகுதியை வெட்டி எடுக்கும் பேரியாட்ரிக் சிகிச்சைகள் இப்போது பிரபலமாக இருக்கின்றன. அடுத்தகட்டமாக Freeze away fat என்ற நவீன சிகிச்சை பிரபலமாகி வருகிறது.

சரும நலம் மற்றும் அழகுசிகிச்சை மருத்துவர் மாயா வேதமூர்த்தியிடம் இந்த சிகிச்சை பற்றி கேட்டோம். Freeze away fat என்பது என்ன?”உடலில் இருக்கும் கொழுப்பை உறைய வைத்து, அகற்றும் முறைதான் Freeze away fat. இந்த சிகிச்சையை 1970ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தார்கள். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. Popsicle என்ற ஐஸ் மிட்டாய் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கிறது. இந்த ஐஸ் மிட்டாயை சாப்பிட்டு வந்த குழந்தைகளுக்குக் கன்னத்தில் குழி விழுந்தது.

அதைத் தற்செயலாகக் கவனித்தார்கள். கன்னம் கொழு கொழுவென்று இருந்த குழந்தைகளுக்குக் கூட இந்த மாற்றம் நடந்தது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்தபோதுதான் ஐஸ் கட்டியை நீண்ட நேரம் கன்னத்தில் வைத்திருப்பதால் கொழுப்பு செல்கள் கரைந்துவிடுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

அதன்பிறகு, ஐஸ் கட்டிக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்யும்போதுதான் மிகவும் குளிர்ந்த நிலையில் கொழுப்பு கரைந்து அதன் செல்கள் இறந்துவிடுகின்றன என்பது தெரிய வந்தது. கொழுப்பைக் கரைக்க இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று மருத்துவ ரீதியாக ஆராய்ந்தபோதுதான் Freeze away fat சிகிச்சை உருவானது.”Freeze away fat எப்படி செய்வார்கள்?
22
”கைகள், தொடைகள், வயிற்றுப்புறச் சதைகள், தாடை என்று எந்த இடத்தில் கொழுப்பு படிந்திருக்கிறது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, வயிற்றுப் பகுதியில் பருமன் என்றால் அந்த இடத்தில் கொழுப்பு படிந்திருக்கும் இடத்தை துல்லியமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, கொழுப்பு எந்த அடர்த்தியில் இருக்கிறது என்பதை அளவிட Fat caliper என்ற எந்திரம் இருக்கிறது. இதன்மூலம் கொழுப்பின் அடர்த்தி எந்த அளவு இருக்கிறது, அதன் சுற்றளவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இதற்குப் பிறகு, அந்தக் கொழுப்பை ஒரே இடத்தில் திரட்ட வேண்டும். இந்த முறையை Vaccum என்பார்கள். கொழுப்பைத் திரட்டிய பிறகு, மைனஸ் 5 முதல் 10 டிகிரி குளிரில் கொழுப்பு செல்களை உறைய வைக்க வேண்டும்.

அதன்பிறகு அந்த கொழுப்பை உறிஞ்சிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கொழுப்பு அகற்றப்பட்டுவிடும்.”மைனஸ் 5 டிகிரிக்கு மேல் என்பதால் சருமத்துக்கு பாதிப்புகள் ஏதேனும் உண்டாகுமா?”இல்லை. குளிரான சூழலில் சருமமோ, அதன் அடியில் இருக்கும் திசுக்களோ, மற்ற செல்களோ, எலும்புகளோ பாதிக்கப்படுவது இல்லை. கொழுப்பு செல்கள் மட்டுமே பாதிக்கப்படும்.

அதனால், Freeze away fat சிகிச்சையில் ஐஸ் கிரிஸ்டல்கள் படிந்து கொழுப்பு செல்கள் மட்டுமே இறக்கின்றன. நம் உடலைப் பாதுகாக்கும் Mechanism புத்திசாலித்தனமானது என்பதால் இறந்த செல்களை 2 முதல் 3 மாதங்களுக்குள் உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.”யாருக்கு இந்த சிகிச்சை பலன் தரும்?”கொழுப்பிலேயே Stubborn fat என்ற வகை உண்டு.

இந்த வகை கொழுப்பு என்ன செய்தாலும் குறையாது. உடற்பயிற்சியினாலோ, உணவுக்கட்டுப்பாட்டினாலோ குறைக்க முடியாது. அந்த வகை Stubborn fat-ஐக் குறைக்க இந்த சிகிச்சை உதவும். ஒருவர் உடல்ரீதியாக ஒல்லியாக இருப்பார்.

ஆனால், வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்புப் படிந்து தொப்பை தெரியும். அவருக்கு உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவை கைகொடுக்காத பட்சத்தில் இந்த சிகிச்சையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை, அனஸ்தீசியா போன்றவற்றை விரும்பாதவர்களுக்கும் Freeze away fat சிறந்தது.”

குறிப்பிட்ட பகுதியின் கொழுப்பைதான் கரைக்க முடியுமா? உடல் பருமனைக் குறைக்க முடியாதா?”இது உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சை இல்லை. உடல் பருமனைக் குறைக்க இந்த சிகிச்சையைப் பயன்படுத்தவும் முடியாது. உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டுதான் இந்த சிகிச்சையில் கொழுப்பைக் கரைக்க முடியும். அந்த குறிப்பிட்ட இடத்தில் இன்ச் அளவில்தான் கொழுப்பு குறையும். இதனால் Inch loss என்றே இந்த சிகிச்சையைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, உடலுக்கு வடிவம் கொடுக்கும் அழகு சிகிச்சை.
22a
அதனால் Body shaping treatment என்ற பெயரும் இதற்கு உண்டு. ஒருவேளை, மொத்த உடல் பருமனையும் குறைக்க விரும்பினால் அதற்கு ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படும். அதாவது, கொழுப்பு நிறைந்த உடலின் ஒவ்வொரு பாகமாக, படிப்படியாக செய்ய வேண்டும். அதற்கு நிறைய பொறுமை தேவை.”மீண்டும் அதே இடத்தில் கொழுப்பு படியாதா?

”கொழுப்பு செல்கள் இறந்துவிடுவதால் அந்த இடத்தில் மீண்டும் கொழுப்பு படியாது. ஒருவேளை உணவுக்கட்டுப்பாடு தவறி, உடற்பயிற்சிகள் செய்யாமல் விட்டாலும் உடலின் வேறு இடங்களில் இருக்கும் கொழுப்பு செல்களில்தான் கொழுப்பு படியும். சிகிச்சை செய்த
இடத்தில் மீண்டும் படிய வாய்ப்பு இல்லை.”Freeze away fat சிகிச்சையினால்பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? ”எந்த பின்விளைவுகளுமே இல்லை என்று சொல்ல முடியாது.

ஒரு வாரத்துக்கு சிகிச்சை செய்த இடத்தில் வலி இருக்கும். அதற்கேற்ற வலி நிவாரணிகள் கொடுக்கப்படும். சில நேரங்களில் ரத்தக்கசிவு உண்டாகலாம். கொழுப்பை ஓர் இடத்தில் திரட்டுவதற்காக எந்திரம் மூலம் இறுக்கிப் பிடிப்பதால் நரம்புகளில் தற்காலிகமாக மரத்துப் போன உணர்வும் இருக்கும். இவையெல்லாம் தற்காலிகமானவைதான். மற்றபடி இது பாதுகாப்பான சிகிச்சை. உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் (FDA) கவனமாகப் பரிசீலித்துதான் அங்கீகரித்துஇருக்கிறது.

சிகிச்சை செய்தபிறகு பின்பற்ற வேண்டிய உணவுமுறையும், உடற்பயிற்சிகளும் இருக்கின்றன. எந்த இடத்தில் கொழுப்பைக் கரைத்தார்களோ, அந்தத் தசைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகள் செய்ய வேண்டும். அதை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று அவசியமும் இல்லை.

”யார் யார் இந்த சிகிச்சையைசெய்துகொள்ளலாம் ?”உணவு முறையில் மாற்றம் செய்தும் குறிப்பிட்ட இடத்தில் கொழுப்பு குறையாதவர்கள், லைப்போசக்‌ஷன் போன்ற அறுவைசிகிச்சையை விரும்பாதவர்களுக்கு இந்த சிகிச்சை பலன் தரும். சிகிச்சை ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். வெளிப்புற நோயாளியாகவே சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என்பதும், சிகிச்சை எடுத்த பிறகு ஓய்வு எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

உடலளவில் பெரிய நோய்கள் எதுவும் இல்லாத, ஆரோக்கியமான எல்லோருமே இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம். Cold sensitivity என்ற அதிக குளிரைத் தாங்கிக் கொள்ள முடியாத உடல்நிலை கொண்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யக் கூடாது. ஆனால், கோல்ட் சென்சிட்டிவிட்டி கொண்டவர்கள் நம் நாட்டில் குறைவுதான்.

அதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் சிகிச்சைக்கேற்றவாறு மாறும். எந்த இடத்தில் கொழுப்பு இருக்கிறது, எந்த அளவு அடர்த்தியாக இருக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.”Inch loss treatment என்றே இந்த சிகிச்சையைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, உடலுக்கு வடிவம் கொடுக்கும் அழகு சிகிச்சை. அதனால் Body shaping treatment என்ற பெயரும் இதற்கு உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button