சைவம்

காராமணி மசாலா கிரேவி

தேவையான பொருட்கள் :

வௌ்ளை காராமணி முளைகட்டியது -1 கப்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்,
பூண்டு- 5,
சீரகத்தூள் – கால் ஸ்பூன்,
தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்,
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி,
தக்காளி – 1,
தேங்காய் துருவல் – சிறிது.

தாளிக்க :

பட்டை, சோம்பு, கிராம்பு,

செய்முறை :

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வேர்க்கடலை, தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.

• முளைகட்டிய காராமணியை 5 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

• கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

• அதில் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும்.

• அதோடு அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

• தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

• இது சப்பாத்தி, புல்கா, ரொட்டி போன்றவற்றோடு பரிமாற நன்றாக இருக்கும்.

4fcb8659 9ae6 4e77 9bfc aacffaaa495d S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button