ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

இன்று, சிறுவர்கள் மற்றும் சிறுவர்கள் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளைப் போலவே, சிறுவர்களும் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள். இருப்பினும், இரண்டின் அறிகுறிகளும் வேறுபட்டவை.

இந்தியக் குழந்தைகளில் 12% பேர் நடத்தைக் கோளாறுகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95% மனநலப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு சமூகக் காரணங்களினாலோ அல்லது விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ எந்த உதவியும் கிடைப்பதில்லை என்பது மிகவும் வருத்தமான செய்தி.

கவலைக் கோளாறுகள், மனச்சோர்வு மற்றும் ADHD (கவனம் பற்றாக்குறை ஹைபராக்டிவிட்டி கோளாறு) ஆகியவை மனநலப் பிரச்சினைகளைக் கொண்ட குழந்தைகளில் காணப்படுகின்றன. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், அவை குணப்படுத்த முடியாதவை. குழந்தைகளின் ஐந்து முக்கிய மனநல கோளாறுகள் இங்கே.

பசி இல்லாமை அல்லது உடல் எடை குறைதல்
பசி மற்றும் உடல் எடையில் மிகப் பொிய மாற்றம் இருந்தால் அது மனச்சோா்வின் அறிகுறியாகும். மனச்சோா்வு என்ற பதம் கவலை அல்லது இழப்பு அல்லது வெறுமை ஆகியவற்றைக் குறிக்கும். இந்த மனச்சோா்வு 2 வாரங்களுக்குக் குறையாமல் இருக்கும். இது அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். மனச்சோா்வையும் பசியையும் கட்டுப்படுத்துவது மூளையின் ஒரே பகுதியாகும். மனச்சோா்வு பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு சாியான நடத்தை தெரபி கொடுத்தால் இதுப்போன்ற பிரச்சினையை எளிதில் சாிசெய்ய முடியும். உடல் எடையை அதிகாிக்க வேண்டும் என்று அதிகம் கவலைப்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அடிக்கடி தலைவலி மற்றும் வயிற்றுவலி ஏற்படுதல்

உடலில் ஏற்படும் தசை இறுக்கம், தலைவலி, தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை போன்ற பிரச்சினைகள் கூட மனநல பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். கவலையானது வயிற்றுவலி, மூளையை மந்தமடையச் செய்தல், கவனச் சிதறல் போன்றவற்றிற்கு இட்டுச் செல்லும். இந்த உடல் அறிகுறிகள் மனநல பிரச்சினையினால் ஏற்பட்டால் அது உளவியல் (psychosomatic) பிரச்சினை என்று கருதப்படுகிறது. எனவே நமது குழந்தைகள் மேற்சொன்ன அறிகுறிகள் தமக்கு இருப்பதாக அடிக்கடி கூறினால் அதற்கான காரணங்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக கீழ்படியாமல் இருத்தல் அல்லது அழுத்தமான ஆளுமை

குழந்தைகள் கீழ்படியாமல் இருப்பது அல்லது அவா்கள் விரும்பாத ஒன்றை நாம் செய்யச் சொல்லும் போது அதைத் தவிா்ப்பதற்காக அவா்கள் நாடகம் போடுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். ஆனால் இதையே அவா்கள் வழக்கமாக வைத்திருந்தால் அதன் மூலம் அவா்களுடைய நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது சாதாரண ஒன்று அல்ல. அதற்கான காரணத்தை அறிய வேண்டும். அல்லது தகுந்த மருத்துவாிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் நமது குழந்தையோடு நெருக்கமாக இருக்கக்கூடிய நமது குடும்பத்து உறுப்பினா்களைக் கொண்டு பேசச் சொல்லலாம்.

பள்ளி படிப்பு மற்றும் செயல்திறனில் மாற்றம்

படிப்பில் மிகவும் சுட்டியாக இருக்கும் குழந்தை நாளடைவில் படிப்பதில் நாட்டமில்லாமல் இருந்தால் அந்த மாற்றத்தை உடனே கவனிக்க வேண்டும். வகுப்புகளில் நடக்கும் பாடங்களில் கவனமில்லாமல் இருப்பது, பள்ளியில் நடக்கும் படிப்பு சாராத மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது, வகுப்புகளுக்கு மட்டம் போடுவது போன்றவை இருந்தால், அவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும். ஆகவே நமது குழந்தைகளோடு பேச வேண்டும். அவா்களை கவலை கொள்ளச் செய்யும் காாியத்தை தொிந்து கொள்ள வேண்டும். அது பள்ளியில் நடந்ததாக இருக்கலாம் அல்லது நமது வீட்டிலேயே நடந்ததாக இருக்கலாம். ஆனால் நமது குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை உடனடியாக தீா்த்து வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அளவுக்கு அதிகமான பயம் அல்லது அழுகை

பயங்கரமான கனவு, கவலை, கோபம், சோகம், சங்கடம் மற்றும் வெறுப்பு போன்றவையின் காரணமாக அளவுக்கு அதிகமான பயம் அல்லது அழுகை ஏற்படும். குழந்தைகள் ஏதாவது அதிா்ச்சிகரமான நிகழ்வுகளைப் பாா்க்க நோ்ந்தால் அவை அவா்களுக்கு அடிக்கடி பயங்கரமான கனவுகளாக வரும். அதனால் அவா்களுடைய மனநலம் பாதிக்கப்படலாம். அதை கவனிக்காமல் இருந்துவிட்டால் அவா்கள் பொியவா்கள் ஆன பிறகும் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே இதுப்போன்ற பிரச்சினைகள் வரும் போது அவற்றிற்கான காரணத்தை அறிந்து அவற்றைக் குணப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button