மருத்துவ குறிப்பு

இதோ எளிய நிவாரணம்! ஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்!

பெண்களுக்கு மட்டும் தான் அழகை கெடுக்கும் பரு தொல்லை இருக்கும் என்றில்லை. ஆண்களுக்கும் பரு தொல்லை இருக்க தான் செய்யும். பொதுவாக பரு என்பது முகத்தில் தோன்றி அழகை கெடுக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், முகத்தை தவிர உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள் ஏற்பட்டு அவதியை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் ஆண்களுக்கு மார்பு பகுதியில் ஏற்படக் கூடிய பரு என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலான ஆண்களுக்கு நெற்றி மற்றும் முதுகு பகுதிகளில் பரு உண்டாகக்கூடும். மார்பு பகுதியில் வரக்கூடிய பரு அதிக வேதனையை தரக்கூடியதாக இருந்தாலும், அதற்கான சிகிச்சை எளியது தான்.

இப்போது, மார்பு பகுதியில் பரு ஏற்படுவதற்கான 4 பொதுவான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்…

காரணங்கள்:
* சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி மற்றும் வெளியீடு

* திறந்த சரும துளைகளை இறந்த சரும செல்கள் அடைப்பது

* வெவ்வேறு காரணங்களால் தோலில் தேங்கக்கூடிய பாக்டீரியாக்கள்

* உடலின் உட்புற ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக சருமத்தில் உண்டாகும் அழற்சி

இவை தவிர, சில தினசரி பழக்கவழக்கங்கள் மார்பு பகுதியில் பரு ஏற்படக் காரணங்களாக உள்ளன.

chestacne1 1
மார்பு பரு ஏற்படுவதற்கான காரணங்கள்:
வியர்வை

எப்போதும் வியர்த்து கொண்டே இருக்குமா உங்களுக்கு? அப்படியெனில் உங்களுக்கு மார்பு பரு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால், வியர்வையில் கழிவுகளும், கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கக் கூடிய பொருட்கள் இருப்பதால், அவை பரு உருவாக வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் உடனே குளிப்பதன் மூலம் பாக்டீரியா உருவாவதை தடுத்திடலாம். மேலும், நீங்கள் அணியும் துணி இறுக்கமாக இருந்தால் கூட மார்பு பரு ஏற்படக்கூடும்.

அழகு சாதனப் பொருட்கள்
சருமத்தை பாதுகாப்பதற்காக கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது என்பது ஆரோக்கியமற்ற செயலாகும். ஏனென்றால், அவற்றில் உள்ள சல்பேட், சரும துளைகளை அடைத்து பருக்களை உருவாக்கிவிடும். எனவே தேர்ந்தெடுக்கும் அழகு சாதனப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிகப்படியான உராய்வு கூட பருவை ஏற்படுத்தும் என்பதால், குளிக்கும் போது, லூஃபா மற்றும் ப்ரஷ்கள் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

சுகாதாரம்
ஒருவரது உடல் சுகாதாரம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. உங்கள் உடலை நீங்கள் சுகாதாரமாக வைத்திருக்க தவறினால், அது உடலில் பருக்கள் மற்றும் புண்களை ஏற்படுத்தக்கூடும்.

உணவுப்பழக்கம்
ஆரோக்கியமான மற்றும் பரு இல்லாத உடலுக்கு நல்ல உணவுப்பழக்கம் இன்றியமையாதது. உங்களது முகம் மற்றும் உடலின் பிற பகுதியில் பருக்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் முதலில் எண்ணெய் உணவுகள், அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.1 1581667262

மார்பு பரு ஏற்படுவதை தவிர்க்கவும், குறைக்கவும் உதவும் டிப்ஸ்:
ஒமேகா 3 அதிகமாக எடுத்துக் கொள்வது

ஒமேகா 3 என்பது ஆரோக்கிமான கொழுப்பு அமிலமாகும். அதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும். மேலும், இது உடலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுத்து, பருக்கள் ஏற்படுவதை தடுத்திடும். ஒமேகா 3 ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதால் அதனை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடுத்தும் உடை
சுவாசிக்கக் கூடிய ஆடை, அதாவது நீங்கள் உடுத்தும் உடை, உங்கள் சருமம் சுவாசிக்க ஏற்றதாக இருக்க வேண்டும். காற்றுப்புகாத ஆடைகளை அணியும் போது சரும சுவாசம் தடைப்பட்டு, வியர்வை பாக்டீயாக்கள் உடலில் தேங்கி பருக்களை உருவாக்கிவிடும். எனவே, காட்டன் உடைகள் தான் உடல் சுவாசத்திற்கு ஏற்ற காற்றோட்டமான ஆடையாகும். எனவே, உடலில் வியர்வையும் தேங்காது, பருக்களும் ஏற்படாது.

ஷாம்புவை மாற்றுங்கள்
உங்கள் கூந்தலில் பொடுகு இருந்தால் கூட பரு ஏற்படக்கூடும். ஒருவேளை உங்களுக்கு பொடுகு தொல்லை இருந்தால், முகம் மற்றும் மார்பு பகுதியில் பருக்கள் ஏற்படக்கூடும். எனவே, அப்படிப்பட்ட சூழலில் ஹெர்பல் ஷாம்புக்களை பயன்படுத்துவது சிறந்தது. இதிலுள்ள, சாலிசிலிக் அமிலம், பருக்களை ஏற்படுத்தக்கூடும் பாக்டீரியாக்களுடன் எதிர்த்து போராடி பருக்கள் வராமல் தடுத்திடும்.

மேற்பூச்சு சிகிச்சை (Topical treatment)
முகத்தில் பரு வராமல் இருக்க, ஃபேஷியல் செய்வது போல் மார்பு பருவை போக்க அப்படியெல்லாம் செய்திட முடியாது. எனவே, உங்கள் சரும நிபுணரை அணுகி சரியான மருத்தை பெறுவதே சிறந்தது. சல்பர் சோப்பு, ஷிங்க் சோப்பு, பென்சோயில் பெராக்ஸைட் மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்றவை மார்பு பருக்களுக்கு ஏற்ற தீர்வுகளாகும்.

சரும நிபுணரை அணுகுங்கள்
மார்பு பருக்களால் கடும் அவதிப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில், சிறந்த சரும நிபுணரை அணுகி அதற்கான தீர்வை கேட்டறிந்து செயல்படுங்கள். அவர்களாலேயே சிறந்த சிகிச்சையளித்து நாள்பட்ட பரு தொல்லைக்கு முட்டுக்கட்டை போட முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button