சைவம்

சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani

தேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், சோயா சங்ஸ் – அரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், தயிர் – அரை கப், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, கொத்தமல்லி, புதினா இலைகள் – மொத்தமாக ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்) தேங்காய்ப்பால் – ஒரு கப், வறுத்த முந்திரி – 6, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை மிகவும் மெல்லியதாக, நீளநீளமாக நறுக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு, பிழிந்தெடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் 2 முறை நன்கு பிசைந்து கழுவவும். கடாயில் சிறிது நெய் விட்டு அதை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் நெய், எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி. உப்பு, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி – புதினா இலைகள், வதக்கிய சோயா சங்க்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும், ஊற வைத்திருக்கும் அரிசியை நீர் வடித்து சேர்த்துக் கலக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து மீண்டுமொரு முறை நன்கு கிளறி மூடவும். நன்கு ஸ்டீம் வந்ததும் ‘வெயிட்’ போட்டு (அடுப்பை ‘சிம்’மில் வைத்து) 10 நிமிடம் கழித்து இறக்கி, வறுத்த முந்திரி தூவினால். சூப்பர் சுவை, கமகம மணம் கொண்ட சோயா சங்க்ஸ் பிரியாணி தயார்.
இதற்கு வெங்காய தயிர் பச்சடி சரியான சைட் டிஷ்.
soya chunks biryanisoya chunks biryani in tamilsoya chunks biryani samayal kurippusoya chunks biryani seimuraisoya chunks biryani srilanka tamil samayal e1448954110957

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button