இனிப்பு வகைகள்

ரசகுல்லா

தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு – 400 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – ஒரு கிலோ
நெய் – 600 கிராம்
பச்சரிசி – 200 கிராம்
ஏலக்காய் – 10

செய்முறை:
பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இந்த நான்கையும் நன்கு சுத்தப்படுத்தி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
8 அல்லது 10 மணிநேரத்தில் அவை நன்றாக ஊறிவிடும்.
பிறகு ஊற வைத்ததை கிரைண்டரில் அரை மணிநேரம் அரைக்க வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான நீரை ஊற்றி சர்க்கரையைக் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
பாகு கொஞ்சம் தண்ணீயாக இருக்க வேண்டும்.அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து அதில் நெய் அல்லது டால்டாவை ஊற்றவும்.
நெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்துக் கொண்டு உருண்டைகளாக உருட்டி அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
உருண்டைகள் சிறிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றைப் பொரிக்கும் போது அவை உப்பிக் கொள்ளும் எனவே பெரிய உருண்டைகளாக போடுவதை தவிர்க்கவும்.
பொரித்த உருண்டைகளை ஏற்கனவே தயாராகச் செய்து வைக்கப்பட்டிருக்கும் பாகில் விட வேண்டும். ரசகுல்லா உருண்டைகள் பாகில் அதிக நேரம் ஊறவேண்டும்.
ddddr e1455860566882

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button