மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா பெற்றோர்களின் சண்டை குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும் தெரியுமா?

திருமண வாழ்க்கை முன்பை போல இப்போது இருப்பதில்லை. நமது பாட்டி, அம்மா ஆகியோர் குடும்பத்தை அனுசரித்து போவது போல இன்றைய காலகட்டம் இல்லை. இப்போது ஆண், பெண் இருவரும் சரிசமம். இருவரும் வேலைக்கு போகிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஈகோ, கோபம், அதிருப்தி, சுயநலம், சலிப்பு, வெறுப்பு, வெறுமை, விரக்தி, சண்டை என உறவுகளுக்குள் சிக்கல்கள் நீண்டு கொண்டே போகிறது. பலரது வீடுகளில் தினமும் ஏதோ ஒரு சண்டை நடக்கிறது. இதனால் ஏற்படும் பிரிவு குழந்தைகளை எத்தனை வகைகளில் பாதிக்கிறது என்பது தெரியுமா?

தனிக்குடித்தனம்

இன்றைய மாறி வரும் சூழலில் தம்பதிகள் பணி நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு தனியாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது தவிர்க முடியாத ஒன்று தான். தனிக்குடித்தம் இருக்கும் போது கணவன் மனைவி பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும், அறிவுரை சொல்லவும் வீட்டில் பெரியவர்கள் யாரும் இருப்பதில்லை.

உங்களுக்கு ஏதேனும் சண்டை வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறுங்கள். சண்டைகளை பெரிதுபடுத்திக்கொண்டே செல்வது பிரிவை உண்டாக்கும்.

பிரச்சனைக்கான காரணம் என்ன?

கருத்து வேறுபாடு, இருவரும் அமர்ந்து சுமூகமாக பேசாமல் இருப்பது, பொறுப்புகளை சுமக்க பயம், ஆரோக்கிய கோளாறுகள், பண பிரச்சனை, அதிகாரம் செய்வது, குழந்தைகளை கவனிப்பதில் மோதல், வீட்டு வேலைகளை செய்வதில் மோதல் ஆகியவை கணவன் மனைவி பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது.

இதன் முடிவில் இனி இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இதனால் விவாகரத்து வாங்கிவிடுகிறார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

குழந்தைகளின் நிலை?

கணவன் மனைவி சண்டையிட்டு கொள்ளும் போது அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். அம்மா அப்பா ஏன் இப்படி சண்ட போட்டுக்கறாங்க? ஏன் எல்லா அப்பா அம்மா மாதிரியும் நம்ம அப்பா அம்மா இல்லையே என ஏங்கி தவிப்பார்கள். சின்ன வயதிலேயே குழந்தைகளை தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயமாகும்?

விவாகரத்துக்கு பின் குழந்தையின் நிலை

பெற்றோர்கள் விவாகரத்துக்கு பின் தாய் அல்லது தந்தையுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது கட்டாயம் சுற்றுவட்டார நபர்களால் அவர்களது மனம் புண்படுத்தப்படுகிறது. குழந்தையின் மனதில் பல குழப்பங்கள் தனது குடும்பத்தை பற்றி ஏற்படும். அது குழந்தைக்கு மன அழுத்தத்தை தரும். இதனால் குழந்தைகள் தனது வாழ்வினை எதிர்கொள்வதே சிரமமாக அமையும்.

உடல் எடை அதிகரிப்பு

குழந்தைகள் தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உள்ளாவதால், தனது 18 வயதில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் பிரச்சனைகள்

பெற்றோர்களின் பிரிவால் குழந்தைகள் அதிகமாக கோபப்படுதல், மன அழுத்தம், எரிச்சலடைவது, சமூகத்திற்கு எதிராக நடந்துகொள்வது, படிப்பில் கவனகுறைவு, அடம்பிடித்தல் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button