சிற்றுண்டி வகைகள்

மூங்தால் வெஜிடபிள் தோசை

தேவையான பொருட்கள் :

மூங்தால் (பாசிப்பருப்பு) – 2 கப்,
ரவை – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
காய்ந்த மிளகாய் – 4,
சீரகம் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையானவை

வெஜிடபிள் செய்ய தேவையானவை :

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கியது வகைக்கு – 1 கப்,
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவையானது,
துருவிய சீஸ் – சிறிதளவு,
கடுகு, சீரகம் – தாளிப்பதற்கு

செய்முறை :

• வெங்காயம், காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளிக்கவும்.

• வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு, துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.

தோசை செய்முறை :

• பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

• அதில் ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

• தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

c085e22b 1fb3 44b7 9f54 0449145516f5 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button