32.9 C
Chennai
Monday, Apr 28, 2025
gobi popcorn 1624100816
Other News

காலிஃப்ளவர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

* காலிஃப்ளவர் – 1 (சிறியது)

* ஐஸ் கட்டி தண்ணீர்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

* மோர் – 1/2 கப்

* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்

* சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

மாவிற்கு…

* கோதுமை மாவு – 1 கப்

* சோள மாவு – 1/2 கப்

* பூண்டு பவுடர் – 1 டீஸ்பூன்

* வெங்காய பவுடர் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

gobi popcorn 1624100816

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் ‘மாவிற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்து விட வேண்டும்.

* அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.

Related posts

சினிமாவிற்கு சில்க் ஸ்மிதாவை பெற்றுத் தந்த வினு சக்கரவர்த்தியின் நினைவு நாள்

nathan

ஆனந்தராஜ் மகளின் திருமணம்! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

nathan

Blacksheep விக்னேஷ்காந்த் பொங்கல் கொண்டாட்டம்

nathan

90 வயதிலும் தாய்மை…!ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம் !

nathan

மாயா என்ன ஜென்மம், ரொம்ப சீப்பான ஆளு – விக்ரம் எலிமினேஷன்

nathan

யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

nathan

கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

nathan

வௌியான உண்மை! சித்ராவை கொ-லை செய்தது இவர்களா?

nathan

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர்

nathan