சைவம்

சௌ சௌ ரெய்தா

தேவையான பொருட்கள்:

சௌ சௌ – 1,
வெங்காயம் – 1
தயிர் – 1 கப்,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி இலை,
பச்சை மிளகாய்

தாளிக்க :

கடுகு,
உளுந்தம்பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,

செய்முறை :

• சௌ சௌ காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயம் போட்டு வதக்கி தயிரில் சேர்க்கவும்.

• சௌ சௌ நன்றாக ஆறினவுடன் அதையும் தயிரில் சோர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

• இந்த சௌ சௌ ரெய்தா சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்a5afc424 4b99 4685 9bc0 ca1148a58df0 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button