மருத்துவ குறிப்பு

தாய் மற்றும் மனைவிக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்வது உங்களுக்குத் தெரியுமா?

திருமணமான பல ஆண்களுக்கு தன் மனைவி மற்றும் தாயை சமாளிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும். தாய் சொல்வதை கேட்பதா அல்லது மனைவி சொல்வதை கேட்பதா என்ற குழப்பம் இருக்கும். இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். தாயையும் விட்டுத்தர முடியாது. மனைவியையும் விட்டுத்தர முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பதை இந்த பகுதியில் காண்போம்.
pregnant woman
தாய்
தாய் என்பவள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியவள். உங்களை பெற்றெடுக்க சரியான தூக்கம் இன்றி உணவின்றி தவித்தவள். பொதுவாக எல்லா தாய்களுக்குமே தனது மகன் திருமணத்திற்கு பிறகு தன்னை விட்டு பிரிந்துவிடுவானோ என்ற பயம் இருக்கும். இதை சில தாய்கள் சமன் செய்து நடந்துகொள்வார்கள். சிலர் இதில் தடுமாறுவார்கள். தாயின் இந்த நிலையை புரிந்து நடந்துகொள்வது மகன் மற்றும் மருமகளின் கடமை.
a1 1
மனைவி
மனைவி என்பவள் உங்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள அவரின் சொந்த வீட்டை விட்டுவிட்டு உங்களை நம்பி மட்டுமே உங்களுடன் வந்தவர். உங்களது வாழ்க்கை முழுவதும் உங்களுடன் வாழப்போகும் துணை உங்கள் மனைவி மட்டும் தான். புகுந்த வீட்டில் தன் கணவனின் அன்பை பெற வேண்டும் என்ற ஆர்வமும், பயமும் உங்கள் மனைவிக்கும் இருக்கும். மேலும் அவருக்கு எந்த அனுபவமும் இருக்காது. இதனை உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் புரிந்து நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
a2 1
#1
இந்த இரு உறவுகளுக்குமே ஆண்கள் மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். யாரையும் யார் முன்பும் குறைத்தோ அல்லது குறை கூறியோ பேசக்கூடாது.
a3 1
#2
இதுவரை நீங்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. உங்கள் மனைவி வாழ்ந்த சூழ்நிலை வேறு. எனவே திருமணத்திற்கு முன்பாகவே உங்கள் மனைவி, அவரது நண்பர்கள், அவரது வேலை, மற்றும் அவருக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
a4 2
#3
உங்களுக்கு திருமணமான பின்னர், வேலைக்கு செல்லும் முன் உங்கள் மனைவியை கட்டி அணைப்பது, அவரை சினிமா, உணவகம் என வெளியே அழைத்து செல்வதால் உங்கள் அம்மா காயப்படமாட்டாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
a5 1
#4
உங்களது மனைவியை புது வீட்டில் பயம் இல்லாமல் வாழ வைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி உங்கள் அம்மாவிடமே அறிவுரை கேளுங்கள்.
a6 1
#5
சமையலறை தான் சண்டை வருவதற்கான முக்கிய இடமே! உங்கள் அம்மா உங்களுக்காக வழக்கம் போல ஆசையாக சமைப்பார். உங்கள் மனைவிக்கும் உங்களுக்கு பிடித்ததை சமைத்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருவரது சமையலையும் ஒரே மாதிரி பாராட்டுங்கள்.
a7 2
#6
ஒருவரது சமையலை மற்றொருவர் முன்பு பாராட்ட வேண்டாம். பாரட்டுவது என்றால் தனியாக பாராட்டுங்கள். பூ வாங்கி வருவது என்றால் கூட இருவருக்கும் வாங்கி கொடுங்கள்.
a8 1
#7
உங்கள் தாய் மற்றும் மனைவியிடம் பேச குறிப்பிட்ட நேரம் ஒதுக்குங்கள். இருவரிடமும் தனித்தனியாக பேசுங்கள்.
a9 1
#8
தனியாக இருக்கும் போது ஒருவரை பற்றி மற்றொருவரிடம் புகழ்ந்து அல்லது அதிகமாக பேசாதீர்கள்.
a10
#9
உங்கள் மனைவியின் முன்பு உங்கள் அம்மாவிடமே அல்லது உங்கள் அம்மாவின் முன்பு மனைவியிடமோ கோபப்பட்டு சத்தம் போடாதீர்கள்.
a11
#10
அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டால், நீங்கள் ஒருவருக்கு மட்டும் ஏதுவாக பேச வேண்டாம். இருவரது சண்டையையும் தீர்த்து வைக்க தெரிந்தால் சண்டையில் தலையிடுங்கள். இல்லை என்றால் பேசாமல் இருப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button