ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? பதின் வயது பிள்ளைகளிடம் பெற்றோர் மனம்விட்டு பேச வேண்டிய 7 விஷயங்கள்!

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகளே, கற்பிக்க வேண்டியதை கற்பிக்க தவறுவது, செய்ய கூடாதவற்றை சரியாக பிள்ளைகள் முன்பே செய்வது. குழந்தைகள் முன்பே தீய சொற்களை பயன்படுத்துவது, மனைவியை அவமானப்படுத்துவது, மற்றவர்களை ஏளனமாக பேசி மகிழ்வது.

ஆனால், பிள்ளைகளுக்கு பள்ளி படிப்புடன் சேர்த்து கற்பிக்க வேண்டிய வாழ்க்கை கல்வியை கற்பிக்க தவறிவிட்டு. அவர்கள் பாதை மாறி பயணிக்கும் போது, இப்படி ஆகிவிட்டார்களே என அய்யோ, அம்மா என கூப்பாடு இடவேண்டியது.

பதின் வயது பிள்ளைகளிடம் பெற்றோர் இந்த 7 விஷயங்கள் விஷயங்களை மனம் விட்டு பேச வேண்டியது அவசியம்…

பாலியல்!

பாலியல் என்றால் கூடாவே கூடாது என ஏதோ தடைசெய்யப்பட்ட விஷயம் போன்ற பார்வையை வளரும் போதே திணிப்பது தான் குழந்தைகளை அதை பற்றி ஆவலாக தேடி அறிந்துக் கொள்ள தூண்டுகிறது. இப்போதிருக்கும் சமூக தளங்கள், நல்லவற்றை விட, தீயவற்றை தான் அதிகம் காண்பிக்கிறது. எனவே, அவர்களாக தேடி தீமையும் சேர்ந்து கற்றுக் கொள்ள விடுவதற்கு பதிலாக, நீங்களாக அவர்களுக்கு நல்லதை மட்டும் புகட்டுவது மிகமிக அவசியம்.

உறவுகள்!

இப்போது வளர்ந்து வரும் தலைமுறைக்கு அதிக நெருக்கமான ஒரே உறவு நட்பு தான். அதனுடன் சேர்த்து, அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் அனைவர் மீதும் பற்றுக் கொள்ளும் படியான விஷயங்களை நீங்கள் பேச வேண்டும். பணத்தை விட அதிகமாக மனிதர்களை சம்பாதித்தால் தான் பிள்ளைகள் நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்பதை பெற்றோர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரசியல்!

தோனி, விராட் எந்த போட்டியில் எத்தனை ரன்கள் குவித்தனர், எந்த நடிகர், எந்த நடிகையிடம் நெருக்கமாக இருக்கிறார் என்பதை அறிந்திருக்கும் அளவிற்கு அரசியல் ரீதியலான பார்வை யாருக்கும் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருக்க எந்த உணவை சாப்பிட வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். நாம் வாழும் இடம் ஆரோக்கியமாக இருக்க அரசியல் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

பொருளாதாரம்!

இன்றைய தங்கத்தின் மதிப்பில் இருந்து, உணவுப் பொருள் விலைவாசி உயர்வு, குறைவது பற்றி எல்லாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். நாளை வளர்ந்து நிற்கும் போது, வாழ்க்கையை தனியாக நடத்து முயலும் போது நிச்சயம் அவர்களுக்கு பொருளாதார அறிவு தேவை.

குடும்ப செலவு!

உங்கள் கஷ்டத்தை காண்பித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் குடும்ப நிலை என்ன, கஷ்டத்தை எப்படி கடந்து வர வேண்டும் என அவர்களுக்கு தெரியும். அதே போல பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் தான் கற்பிக்க வேண்டும்.

மனித மதிப்பு!

நம் வாழ்வில் நாம் பொருள்களுக்கு தரும் அளவிற்கான மதிப்பை மனிதர்களுக்கு தருவதில்லை. ஒருவருக்கு எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும், எந்த இடத்தில் ஒருவரை வைக்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். பணம், தொழில் காரணமாக அழிந்தவரை விட, மனிதர்களால் அழிந்தவர்கள் தான் அதிகம்.

தொழில் முறை வாழ்க்கை!

இன்ஜினியரிங், மருத்துவம் மட்டும் தான் பணம் தரும் தொழில் அல்ல. சச்சினும், தோனியும் படப்பிடிப்பு பயின்றா உயர்ந்தார்கள்? நமக்கு என்ன சரியாக வருமோ அதை நேர்த்தியாக, அப்டேட்டடாக செய்தாலே போதும் எளிதாக உயர்ந்துவிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button