அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…காட்டுக்குள் 17 வருடங்களாக காரோடு வாழும் வன மனிதர்!

கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவின் கர்நாடகா காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் முதியவர் ஒருவர் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.

56 வயதான சந்திரசேகர் எனு குறித்த நபர், தனது வாழ்நாளில் 17 வருடங்கள் தட்சிணா கர்நாடகாவின் சுல்லியா தாலுகாவின் அரந்தோடு அருகே அடலே மற்றும் நெக்கரே கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழ்ந்து உள்ளார்.

வன மனிதர் சந்திரசேகர் ஒரு காலத்தில் நெக்ரல் கெம்ராஜே கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலங்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ 40 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய காரை தவிர அனைத்தையும் ஜப்தி செய்ததுடன் வங்கி அவரது நிலத்தை ஏலத்தில் விட்டு, அவரை நிலமற்றவராக்கியது.

வங்கி நடைவடிக்கைகளால் வீட்டை விட்டு வெளியேறிய சந்திரசேகர், தனது தங்கை வீட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்துவந்தார். எனினும் அங்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் சண்டை ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய காருடன் அடர்ந்த வனத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு 17 வருடங்கள் வாழ்ந்துவந்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில், அவர் காடுகளில் இருந்து மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளை நெசவு செய்து, அருகிலுள்ள கிராமக் கடையில் விற்று தனக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கியுள்ளார்.

எனினும் தொற்றுநோய்க்குப் பிறகு, அவர் காட்டுப்பழங்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்து உள்ளார். இதேவேளை சந்திரசேகர் தனது கொரோனா தடுப்பூசியை நாகரிகத்திலிருந்து தனித்திருந்த போதிலும் அரந்தோட் கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் போட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக காட்டுக்குள்ளே வாழ்ந்து வரும் அந்த முதியவர் சந்திரசேகர் வங்கியிடமிருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்பதே தன்னுடைய லட்சியம் என கூறுகிறார்.

21 61651d5476d38

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button