சரும பராமரிப்பு

சருமத்தை அழகாக்கும் கற்றாழை

கோடையில் கொளுத்தும் வெயிலால் தோல் பெரிதும் பாதிக்கும். தோலில் கருமை நிறம் ஏற்படும். குறிப்பாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்கான மருத்துவம் குறித்து பார்ப்போம்.அதிக வெயிலால் தோலில் ஏற்படும் எரிச்சல், சிவப்பு தன்மை, கொப்பளங்கள், வியர்குரு ஆகியவற்றை போக்கும் முறையை பார்க்கலாம். பருத்தி துணியை குளிர்ந்த நீரில் நனைத்து பிழிந்து எடுக்கவும்.

தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கவும். இவ்வாறு செய்துவர எரிச்சல் அடங்கி தோல் பழைய நிலைக்கு திரும்பும்.வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும். எரிச்சல், வியர்வை போன்றவற்றால் உடலில் அரிப்பு ஏற்படும். எனவே, நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். சோற்று கற்றாழையை பயன்படுத்தி தோலை பாதுகாக்கும் மருந்து தயாரிக்கலாம்.

சோற்று கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு சதையை எடுக்கவும். இதை தோலில் தடவினால் புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். வியர்குருவை போக்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட சோற்றுக் கற்றாழை சருமத்துக்கு அழகு, ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உருளைக் கிழங்கை பயன்படுத்தி, உஷ்ணத்தால் தோலில் ஏற்படும் பாதிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

உருளை கிழங்கில் இருந்து சாறு எடுத்து, அரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும். தோலில் பாதிப்பு உள்ள இடத்தில் இதை தடவவும். இதனால் தோல்நோய்கள் குணமாகும். பல்வேறு நன்மைகள் கொண்ட உருளை கிழங்கு புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது. மேல்பூச்சாக போடும்போது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. டீ தூளை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். டீ தூளில் நீர்விட்டு நன்றாக காய்ச்சவும்.

இதை வடிகட்டி எடுத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர், ஒரு மெல்லிய துணியில் நனைத்து தோலில் தடவினால் தோலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். காலை, மாலை இவ்வாறு செய்துவர சிவப்புதன்மை மறையும். உற்சாக பானமாக விளங்கும் டீ, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை சாறு புண்களை விரைவில் ஆற்றும். எலுமிச்சை, டீ தூள் ஆகியவை தோலை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.yY0BD4g

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button